fbpx

’ஐயோ என் மானம் போச்சு’..!! இளம்பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த பாஜக நிர்வாகி..!! குமரியில் அதிர்ச்சி..!!

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி மிஷன் காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் விமலன் (45). இவர், தோவாளை கிழக்கு ஒன்றிய பாஜக சிறுபான்மை பிரிவு நிர்வாகியாக இருக்கிறார். இந்நிலையில், சம்பவத்தன்று இவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், வீட்டில் குளித்துக் கொண்டிருந்ததை ரகசியமாக செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண், கத்தி கூச்சலிட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு இளம்பெண்ணின் கணவர் மற்றும் வீட்டில் இருந்தவர்கள் பதறியடித்து ஓடி வந்தனர். ஆனால், அதற்குள் விமலன் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, விமலன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். அவர் சென்னை அல்லது கேரளாவுக்கு சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Read More : 10ஆம் வகுப்பில் நடிகர் தனுஷ் மகன் எடுத்த மார்க் எவ்வளவு தெரியுமா..? இந்த நிலைமையிலும் இப்படியா..?

Chella

Next Post

பிரபல ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!! வீட்டில் இருந்தே பணிபுரியலாம்..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Sat May 11 , 2024
பிரபல ஐடி நிறுவனமான லிவென்டஸ் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ முறையில் பணியாற்ற வாய்ப்பு வழங்கியுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு Liventus நிறுவனம் செயல்பட்டு வருகிறது. முழுநேர தொழில்நுட்பம் சார்ந்த சர்வீஸ் மற்றும் தீர்வுகளை வழங்கும் நிறுவனமாக இது உள்ளது. குறிப்பாக, Custom Software Development மற்றும் Business Process Automation சேவைகளில் இந்நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனத்தின் கிளை பெங்களூரில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் லிவென்டஸ் நிறுவனத்தில் […]

You May Like