Mackenzie scotts: அமேசான் நிறுவன தலைவரின் முன்னாள் மனைவி தனது சொத்தில் இருந்து ரூ.1.64 லட்சம் கோடியை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
உலக பணக்காரர்களில் ஒருவரான அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் (வயது 55). இவர், அமேசான் நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்பு நாவலாசிரியரான மெக்கின்சியை (48) காதலித்து, திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 3 ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில், ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர். இந்த நிலையில், கடந்த 2018ம் ஏப்ரல் மாதம் முறைப்படி விவாகரத்து பெற்றனர். அதனை தொடர்ந்து, ஜெப் பெசோஸ், தனது சொத்தில் 25 சதவீதத்தை மனைவி மெக்கின்சிக்கு ஜீவனாம்சமாக கொடுக்க முடிவு செய்தார். அதன்படி, மெக்கின்சிக்கு அமேசானில் 4 சதவீத பங்குகள் கிடைத்தன.
அதன்படி 35 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி) மெக்கின்சிக்கு வழங்குவதாக அவர் அறிவித்தார். இதன் மூலம் உலகிலேயே அதிக தொகையை மனைவிக்கு ஜீவனாம்சமாக கொடுத்தவர் என்கிற பெருமைக்கு ஜெப் பேசோஸ் சொந்தக்காரர் ஆனார். அதே போல் கணவரிடம் இருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி பெற்றதன் மூலம் மெக்கின்சி, உலகின் 3-வது மிகப்பெரிய பெண் பணக்காரர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். மெக்கின்சியின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் 37 பில்லியன் டாலர்களாக (ரூ.2 லட்சத்து 59 ஆயிரம் கோடி) உள்ளது.
இந்த நிலையில் தனது சொத்தில் சரிபாதி தொகையை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கிவருகிறார். 2019 முதல், அவர் தனது நிகர மதிப்பான 35.6 பில்லியன் அமெரிக்க டாலர்களில் 19 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாக நன்கொடை அளித்துள்ளார். அதன் ஒருபகுதியாக, தற்போது, ரூ.1.64 லட்சம் கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளில், 2,000க்கும் மேற்பட்ட இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்கு அவர் நிதி உதவி வழங்கியுள்ளார் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஃபோர்ப்ஸ் பத்திரிகையின்படி, அவரது தற்போதைய நிகர மதிப்பு 32 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது ரூ.2,77,027 கோடி. கிழக்கு டெக்சாஸ் முதல் வடக்கு தான்சானியா வரை சுகாதாரம், கல்வி, மலிவு விலை வீடுகள் மற்றும் குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் பணியாற்றும் 2,450க்கும் மேற்பட்ட அமைப்புகளுக்கு நன்கொடை வழங்கி வருகிறார். இதுகுறித்து மெக்கின்சி கூறுகையில், “என்மீது அக்கறை கொண்டவர்களிடம் நான் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்க வேண்டியதில்லை”, எனக்குக் கிடைத்ததை நான் அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார். மெக்கின்சி வழங்கும் நன்கொடைகள் ‘கவலைக்குரியவை’ என்று எலோன் மஸ்க் ஏற்கனவே கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Readmore: பில்டர் காபி நிலையம் அமைக்கும் நபர்களுக்கு ரூ.2 லட்சம் மானியம்…! திட்டத்தின் முழு விவரம் இதோ