fbpx

அடடே..!! உடல் எடையை குறைக்க சூப்பர் ஜூஸ் இதுதான்..!! வெறும் 7 நாட்களில் தொப்பையை கரைக்கலாம்..!!

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ஜூஸ் குடிக்கலாம் என்பது புதிய விஷயம் அல்ல. ஏனென்றால், உடல் எடையை குறைக்க நாம் டயட்டில் இருக்கும் போது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்க வேண்டியது அவசியம். அந்த வகையில், பழ ஜூஸ்களில் உடலுக்கு தேவையான பல விட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளது. அந்தவகையில், உடல் எடை குறைப்புக்கு உதவும் பூசணிக்காய், கேரட் ஜூஸ் எப்படி செய்வது என இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பூசணிக்காய் (சிறியது) – 1

கேரட் – 3

ஆப்பிள் பழம் – 1

இஞ்சி – ஒரு சிறிய துண்டு

இலவங்கப்பட்டை பொடி – 1/2 ஸ்பூன்

ஐஸ் கட்டி – தேவையான அளவு

நாட்டு சர்க்கரை – தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஜூஸ் செய்ய எடுத்துக் கொண்ட சிறிய அளவிலான பூசணிக்காயை தோல் நீக்கி சுத்தம் செய்யவும். பின்னர், அதில் இருக்கும் விதைகளை நீக்கி, காயினை மட்டும் சிறிய துண்டுகளாக வெட்டி தனியே எடுத்து வைக்கவும்.

* அதேபோல், கேரட்டினை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தொடர்ந்து இஞ்சியையும் தோல் நீக்கி சுத்தம் செய்துக்கொள்ளவும்.

* தற்போது ஒரு முழு ஆப்பிள் பழத்தை எடுத்து தோல் நீக்கி சுத்தம் செய்துக் கொள்ளவும். பின்னர் இந்த ஆப்பிளையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* தற்போது ஒரு மிக்ஸி ஜாரில் பூசணிக்காய், ஆப்பிள் மற்றும் கேரட்டை சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து, இதில் ஐஸ் கட்டிகள் மற்றும் சர்க்கை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

* பின்னர் இதனுடன் இஞ்சி துண்டுகளை இடித்து சேர்த்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இலவங்கப்பட்டை பொடியையும் சேர்த்து ஒரு முறை அரைத்துக்கொள்ளவும். தேவையிருப்பின் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.

* நன்கு அரைக்கப்பட்ட இந்த ஜூஸினை ஒரு வடிக்கட்டி பயன்படுத்தி, திப்பைகளை நீக்கி ஒரு குடுவையில் சேமித்து வைக்க சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த பூசணிக்காய் ஜூஸ் ரெடி.

* ஒரு கிளாஸில் இந்த சாறை ஊற்றி, கேரட் துண்டுகளை வட்ட வடிவில் வெட்டி அழகுக்கு கிளாஸின் விளிம்பில் வைத்து அழகாக பரிமாறலாம். தேவைப்பட்டால் ஐஸ் கட்டிகளை இதன் மீது சேர்த்துக்கொள்ளலாம்.

Read More : பேப்பர் கப்பில் டீ, காஃபி குடிப்பது நல்லதுன்னு நினைச்சிட்டு இருக்கீங்களா..? ரொம்பவே ஆபத்து..!! கேன்சர் கூட வருமாம்..!!

English Summary

In this post, you will see how to make pumpkin and carrot juice that helps with weight loss.

Chella

Next Post

சிரியாவில் சிக்கியிருந்த 75 இந்தியர்கள் மீட்பு!. பெய்ரூட்டில் தங்கவைப்பு!. விரைவில் தாயகம் திரும்புவர்!

Wed Dec 11 , 2024
Indians rescued: கிளர்ச்சியாளர்களின் வன்முறைக்கு மத்தியில் சிரியாவில் சிக்கியிருந்த 75 இந்தியர்கள் மீட்பு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிரியா நாட்டில் 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போரில் ஈடுபட்டு வருகின்றனர். சில ஆண்டாக வன்முறை எதுவும் ஏற்படாத நிலையில், கடந்த வாரம் மீண்டும் கிளர்ச்சி வெடித்தது. சிரியாவில் உள்ள அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளைக் […]

You May Like