fbpx

’ஐயோ என்னை காப்பாத்துங்க’..!! நடுரோட்டில் அலறிய மாணவி..!! பார்த்ததுமே குலைநடுங்கி போன பொதுமக்கள்..!! நடந்தது என்ன..?

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் கோபாவரம் ஹைவேஸ் பகுதியில், ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இளம்பெண் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டது. உடலில் பற்றிய தீயுடன், காப்பாத்துங்க என்று கதறி அழுதுகொண்டே ஓடிவந்தார். அவரை பார்த்ததுமே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்து தீயை அணைத்தனர். அத்துடன் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளம்பெண்ணை மீட்டு பத்வேல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸ் தரப்பு கூறுகையில், “கடப்பா மாவட்டம் பத்வேல் ராமாஞ்சநேய நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 20). இவர், அதே பகுதியை சேர்ந்த தஸ்தகிரிம்மா (வயது 16) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

ஆனால், விக்னேஷூக்கு வேறு ஒரு பெண்ணுடனும் பழக்கம் ஏற்பட்டு திருமணம் நடந்துள்ளது. இதனால், தஸ்தகிரிம்மாவை கழட்டிவிட முடிவு செய்தார். ஒருகட்டத்தில் தன்னை விக்னேஷ் கழட்டிவிட முடிவு செய்ததை அறிந்த, தஸ்தகிரிம்மா கொந்தளித்துள்ளார். இதனால் எரிச்சலடைந்த விக்னேஷ், தஸ்தகிரிம்மாவை கொலை செய்ய முடிவு செய்தார்.. இதற்காக, அவரிடம் நைசாக பேசி, கோபாவரம் ஹைவேஸ் பகுதியில், ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வரவழைத்துள்ளார்.

அங்கு அந்தப் பெண்ணிடம் ஆசை ஆசையாக பேசிக்கொண்டேயிருந்த விக்னேஷ், திடீரென பாக்கெட்டில் இருந்து சிகரெட் லைட்டர் எடுத்து, தஸ்தகிரிமிம்மா மீது தீவைத்துள்ளார். இதில் தீ பரவி, அந்த பெண்ணின் உடையெல்லாம் பற்றிக்கொண்டு எரிய துவங்கியதுமே, விக்னேஷ் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய விக்னேஷை தேடி வந்த நிலையில், அவரை தற்போது கைது செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே சோகமான விஷயம் என்னவென்றால், அந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.

Read More : ’வாய் மொழியில் வித்தை காட்டுவது நம் வேலையல்ல’..!! ’இவர்கள் யாரும் மாநாட்டிற்கு வர வேண்டாம்’..!! விஜய் பரபரப்பு அறிக்கை..!!

English Summary

Class 11 girl set on fire by boyfriend in Andhra Pradesh, dies in hospital

Chella

Next Post

மைதா உணவுகளை சாப்பிட்டால் உங்கள் உடலில் என்ன நடக்கும்? - மருத்துவர் சொன்ன விளக்கம் இதோ..

Mon Oct 21 , 2024
Recipes made from refined flour are definitely tasty, but if you do not control this desire, then it can cause great harm to your health in the future.

You May Like