fbpx

”ஐயோ.. முடியுற நேரத்துல மாட்டிவிட்டாங்களே”..!! இளைஞர்கள் செய்த சம்பவம்..!! வசமாக சிக்கிய உல்லாச ஜோடி..!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 25 வயது பெண்ணுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே அதாவது, மைனராக இருக்கும் போதே திருமணம் நடந்துள்ளது. அவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில், கணவன் – மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வாழ்ந்து வருகின்றனர். அந்த இளம்பெண் தனது குழந்தைகளுடன் பொள்ளாச்சி அருகே உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், அந்த பெண்ணுக்கு சேலத்தை சேர்ந்த திருமணம் ஆகாத 29 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த வாலிபர் பொள்ளாச்சி பகுதியில் மின்சார வாரியத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியிருக்கிறது. சம்பவம் நடந்த அன்று இரவு அந்த சேலம் இளைஞரை, திருமணமான பெண் தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அதன்படி, அவரும் யாருக்கும் தெரியாமல் வந்துள்ளளார்.

பின்னர், வீட்டில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதை பார்த்த சிலர் வேண்டும் என்றே அவர்களை சிக்க வைக்கும் நோக்கத்தில் திருடன்… திருடன்… என சத்தம் போட்டுள்ளனர். இதை கேட்டு அந்த பெண்ணின் வீட்டு முன்பு பொதுமக்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த தகவலின் பேரில் வடக்கிபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் காதலிப்பதாகவும், அந்த பெண் அழைத்ததன் பேரில் வந்ததாகவும் இளைஞர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அந்த இளைஞரை போலீசார் விடுவித்தனர். இதற்கிடையே திருடன் திருடன் என்று பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் கூச்சலிட்டு அசிங்கப்படுத்தியால் பொள்ளாச்சி பெண்ணை திருமணம் செய்ய சேலம் இளைஞர் மறுத்ததாக தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அந்த பெண் திடீரென்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Chella

Next Post

’இன்னைக்கு செம கச்சேரி இருக்கு’..!! ஆட்டம் காணப்போகும் 4 மாவட்டங்கள்..!! அலெர்ட் செய்யும் வானிலை மையம்..!!

Wed Nov 22 , 2023
தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவி வருவதால், தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், […]

You May Like