fbpx

”ஐய்யோ… என் புள்ளைய வெட்டி சாய்ச்சுட்டாங்களே”..!! தாய் கண்முன்னே கொலைக்கு பழி தீர்த்த கும்பல்..!! திண்டுக்கல்லில் அதிர்ச்சி..!!

கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த வினோத் என்பவரை 3 பேர் கொண்ட கும்பல், வீடு புகுந்து வெட்டி சாய்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டியில் இருந்து மொட்டணம்பட்டி செல்லும் சாலையில் உள்ள டிவைன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி மஞ்சுளா. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர், சுள்ளான் என்பவரை கடந்த 2020ஆம் ஆண்டு வெட்டிக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். மேலும், திண்டுக்கல்லில் இருந்தால் எதிரிகளால் தனது உயிருக்கு ஆபத்து வரும் என்பதை உணர்ந்து திருப்பூரில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், மனைவி மற்றும் குழந்தைகளை திருப்பூர் அழைத்துச் செல்வதற்காக தனது வீட்டிற்கு வந்துள்ளார் வினோத். நேற்றிரவு தனது வீட்டில் தாய், அக்காவுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத 3 பேர் கொண்ட நபர்கள், திடீரென்று வீட்டுக்குள் புகுந்து தாய் கண்முன்னே வினோத்தை வெட்டிப் படுகொலை செய்தனர். இதைப் பார்த்து தாய், அக்கா கதறி துடித்த நிலையில், அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீசார், வினோத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை நடந்த இடத்தில் காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். நேற்று முன்தினம் வேடப்பட்டி பகுதியில் கூலித்தொழிலாளி பாண்டி என்பவர் மது போதையில் ஏற்பட்ட தகராறில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பெரும் அச்சத்தில் இருந்த பொதுமக்களை, தற்போது 48 மணி நேரத்தில் மேட்டுப்பட்டி பகுதியில் வினோத்குமார் என்பவர் வீடு புகுந்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More : ”டீச்சர் கிட்ட வாங்க”..!! பெண் ஆசிரியையை கட்டிப்பிடித்து ரொமான்ஸ் செய்த பள்ளி முதல்வர்..!! அதிர்ச்சி வீடியோ உள்ளே..!!

English Summary

A gang of 3 members hacked Vinod, who was arrested in a murder case and was out on bail, to death.

Chella

Next Post

”இனி ரவுடிகளுக்கு புரியும் மொழி நடவடிக்கை இருக்கும்”..!! புதிதாக பொறுப்பேற்ற சென்னை ஆணையர் அருண் பேட்டி..!!

Mon Jul 8 , 2024
Arun, the newly appointed Chennai Municipal Commissioner, said, "From now on, operations will be in a language that the raiders can understand."

You May Like