fbpx

சருமத்தில் எண்ணெய் வழிகிறதா? … கோடைக்கால ஸ்கின் டிப்ஸ் இதோ!… கட்டாயம் பின்பற்றுங்கள்!

கோடைக்காலத்தில் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு முகப்பருக்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதுபோன்ற சருமம் கொண்டவர்கள் பருக்கள் ஏற்படாமல் தடுப்பதற்கான வழிமுறைகளை தெரிந்துகொள்ளலாம்.

மாறிவரும் காலநிலைக்கு ஏற்ப சருமத்தில் பல்வேறு ஆரோக்கியமற்ற பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது. அதாவது, எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு முகப்பருக்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அவ்வப்போது தண்ணீரில் முகத்தை கழுவுவது, பால் பொருட்களை அளவுடன் சாப்பிடுவது, வெயிலில் அதிக நேரம் அலையாமல் இருப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதன்மூலம் பருக்கள் எதுவும் வராமல் இருக்கும். அந்த வகையில் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய சில உணவுகளை குறித்து பார்க்கலாம்.

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. அந்த பட்டியலில் பால் மற்றும் பால் பொருட்கள் சருமத்தை எண்ணெய் பசையாக மாற்றும். உப்பின் அதிகப்படியான பயன்பாடு எண்ணெய் சருமத்தை மோசமாக பாதிக்கும். எனவே, உப்பு அதிகம் உள்ள உணவுகளை (ஊறுகாய், வற்றல்) அதிகளவில் சாப்பிடுவது கூடாது. முடிந்தவரை உப்பை மிகவும் கம்மியாக சாப்பிடுங்கள். இதனால் எண்ணெய் பசை கொண்ட சருமப் பிரச்னை வராமல் தவிர்க்கப்படுவது மட்டுமின்றி, உடலுக்கு பல்வேறு நன்மைகளும் கிடைக்கின்றன. காபியில் உள்ள காஃபின் சருமத்தை எரிச்சலூட்டும் மற்றும் முகப்பரு வெடிக்கும் அபாயத்தை அதிகரிக்கும். எனவே இவற்றின் பயன்பாட்டையும் குறைக்கலாம். காபி பதிலாக டீ குடிப்பது, பால் கலக்காமல் நாட்டுச் சக்கரை கலந்து வெறு காபியை குடிப்பது போன்றவை சிறந்த மாற்றுவழிகளாகும்.

பாஸ்தா, ஜங்க் ஃபுட் மற்றும் பழச்சாறுகளில் சர்க்கரை அதிகம் உள்ளது. இவை சருமத்தின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். எனவே இவற்றை உணவில் இருந்து தவிர்ப்பது நல்லது. பேக்கரி உணவுகளிலும் சர்க்கரை அதிகம். எனவே எண்ணெய் பசை சருமத்திற்கு இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.பொரித்த உணவுகளை முடிந்தவரை தவிர்த்திடுங்கள். அதில் கொழுப்பு, உப்பு, இனிப்பு என எல்லாமே இருக்கும். அதேபோன்று, எண்ணெய் பசை கொண்டவர்களுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தால், அதை உடனடியாக கைவிடுவது மிகவும் நல்லது. இதனால் சருமத்தின் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்பட்டு, உடல்நலனையும் பாதிக்கும்.

Kokila

Next Post

மனைவி, கணவரின் குடும்பத்தாரை மதிக்காமல் இருப்பதும் கணவனுக்கு எதிரான கொடுமை தான்!... ம.பி.ஐகோர்ட்!

Sat Mar 25 , 2023
மனைவி , கணவரையும் அவரது குடும்பத்தாரை மதிக்காமல் இருப்பது கணவனுக்கு எதிரான கொடுமை தான் என்றும் மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் பெண் ஒருவருக்கும் அவரது கணவருக்கும் விவாகரத்து வழங்கி குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அந்த பெண் மேல்முறையீடு செய்துள்ளார். இதையடுத்து இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை நீதிபதிகள் ஷீல் நாகு மற்றும் நீதிபதி வீரேந்திர சிங் ஆகியோர் அடங்கிய […]

You May Like