fbpx

லாட்டரி டிக்கெட்டுக்காக ஒருத்தரு எவ்வளவு பணம்  செலவு பண்ணியிருக்காருனு தெரியுமா?

கேரளாவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தன் வாழ்நாளில் எவ்வளவு பணம் செலவு பண்ணியிருக்காருன்னு தெரிஞ்சுகிட்டீங்கனா நீங்க ரொம்ப வருத்தப்படுவீங்க…

கேரளாவைச் சேர்ந்த சதாரணமான குடும்பத்தைச் சேர்ந்தவர் ராகவன்(70). இவருக்கு லாட்டரி மீது மோகம் அதிகம் . இதனால் எப்பயாவது நமக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என நம்பி அடிக்கடி லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குவார். ஆனால் அதிர்ஷ்டமே அடித்ததில்லை .

தனது 18 வயதில் இருந்து 1970ல் இருந்து லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி குவித்துள்ளார். இதுவரை 3 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு இவர் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார். ஆனால் 2 , 3 முறை வெறும் 5,000 ரூபாயும் , ஒரு முறை 100 ரூ, 200 ரூபாயும் பரிசு விழுந்துள்ளது.

இன்னும் லாட்டரியில் தனக்கு பரிசு வரும் என காத்திருக்கும் இவர் இப்போதும் தனக்கு கிடைக்கும் பணத்தில் அடிக்கடி லாட்டரி வாங்குகின்றாராம். இதுவரை 3 கோடியோ 50 லட்சம் ரூபாய்க்கு தன் வாழ்நாளில் லாட்டரிகளை வாங்கியிருப்பதாக கூறி வேதனைப்பட்டார் அந்த முதியவர். இதனால் பலரும் அவரை லட்சுமிக்கு பதிலாக தரித்திர லட்சுமி அய்யனை சுற்றியது போல என கிண்டலடித்து வருகின்றார்கள்.

Next Post

3 கோடி இழப்பீடு கேட்டு கொலையான சுவாதி பெற்றோர் தொடர்ந்த வழக்கு….

Thu Sep 22 , 2022
சென்னை நுங்கம்பாகத்தில் சுவாதி என்ற பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இழப்பீடு கேட்டு தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 2016ம் ஆண்டு ஐ.டி. பெண் சுவாதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராம்குமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். புழல்  சிறையில்அடைக்கப்பட்ட அந்த இளைஞர் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். ராம் குமார் உயிரிழப்பில் […]

You May Like