fbpx

தூள்…! அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்…! மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!

பல மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தி வருகின்றன. ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் ஏற்கனவே பழைய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தி தேசிய ஓய்வூதிய முறையை நிறுத்திவிட்டன.

பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், அரசு ஊழியருக்கு ஓய்வூதியத் தொகை முழுவதும் ஓய்வுக்குப் பிறகு அரசால் வழங்கப்படும். பணிபுரியும் காலத்தில் பணியாளரின் சம்பளத்தில் இருந்து ஓய்வூதியத் தொகை கழிக்கப்படுவதில்லை.இருப்பினும், பழைய ஓய்வூதியத் திட்டம் 2004 இல் காங்கிரஸ் அரசாங்கத்தால் நிறுத்தப்பட்டது. பின்னர் அடல் பிஹாரி வாஜ்பாய் அரசாங்கம் தேசிய ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்தியது. பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஓய்வுபெற்ற அரசு ஊழியர், ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி பெற்று வருகின்றனர்.

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்பட வேண்டும் பல மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை முன்வைத்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து பல மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் குறிப்பிட்ட சில விதிமுறைகளுடன் பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன்படி 28 துறைகளில் 35 பிரிவுகள் முழுமை அடையாமல் இருப்பதாகவும் செப்டம்பர் 12ஆம் தேதிக்குள் அனைத்து துறைகளும் தேர்வு செய்யப்பட பணியாளர்களின் விவரங்களை தெரிவிக்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

Vignesh

Next Post

உஷார்...! இந்த மருந்தை யாரும் பயன்படுத்த வேண்டாம்...! மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை...!

Thu Sep 7 , 2023
டிஜின் ஜெல் (Digene gel) என்னும் மருந்து வெண்மையாக மாறியதாகவும், கசப்பாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் வாடிக்கையாளர்கள் தெரிவித்ததை அடுத்து, மருந்து தயாரிப்பு நிறுவனமான அபோட் இந்தியா, கோவாவில் தயாரிக்கப்பட்ட பிரபலமான ஆன்டாக்சிட் சிரப், டிஜின் ஜெல் என்னும் மருந்துகளை அனைத்து கடைகளில் இருந்து திரும்பப் பெற்றுள்ளது. இந்த சிரப் பொதுவாக இளஞ்சிவப்பு நிறத்தில் இனிப்புச் சுவையுடன் இருக்கும். மத்திய மருந்துக் கட்டுப்பாட்டாளரான சென்ட்ரல் டிரக்ஸ் ஸ்டாண்டர்ட் கன்ட்ரோல் ஆர்கனைசேஷன், அதன் […]

You May Like