காவிரி விவகாரத்தில் கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்படுவது போன்ற பழைய வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜீவா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக அரசின் பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு பிறகு காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட்டுள்ளது. இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்படுவது போன்ற பழைய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
இது போன்ற வீடியோக்களை பகிர்ந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜீவா எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை திட்டமிட்டு சமூக ஊடகங்களில் பரப்பி வரும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.