fbpx

ஒலிம்பிக் 2024 | முதல் வாய்ப்பிலேயே இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா..!!

பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றில் முதல் வாய்ப்பிலேயே இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா.

பாரிஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டிக்கான தகுதிச் சுற்று இன்று நடைபெற்றது. 2 இரண்டு கட்டங்களாக நடைபெறும் இப்போட்டியில் மொத்தம் 32 பேர் பங்கேற்றனர். முதற்கட்ட தகுதிச்சுற்றில் ஏ மற்றும் பி என இரண்டு குழுக்களாக வீரர்கள் பங்கேற்றனர். இந்தச் சுற்றில் தகுதி பெற வேண்டும் எனில் ஒரு வீரர் 84 மீட்டர் தூரம் ஈட்டி எறிய வேண்டும். ஒவ்வொரு வீரருக்கும் 6 வாய்ப்புகள் கொடுக்கப்படும்.

அதில் எது சிறந்த தூரமோ அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அந்த வகையில், பி பிரிவில் உள்ள இந்திய வீரர் நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பிலேயே 89.34 மீட்டர் ஈட்டியை எறிந்து அசத்தினார். இதன் மூலம் அவர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்த சீசனின் மிகச் சிறந்த தூரம் இது என குறிப்பிடப்பட்டுள்ளது.

நீரஜ் சோப்ரா :

2020இல் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக் தடகளப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார். இவர் எறிந்த ஈட்டியின் தூரம் 87.58 மீட்டர் ஆகும். அந்த வகையில், இந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் நீரஜ் தங்கம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு இந்தியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Read More : ”இம்மாத இறுதிக்குள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடை”..!! அமைச்சர் கீதா ஜீவன் சொன்ன குட் நியூஸ்..!!

English Summary

India’s Neeraj Chopra qualified for the finals of the Paris Olympic javelin qualifiers at the first opportunity.

Chella

Next Post

'மூன்றாம் உலக போருக்கான நேரம் இது..!!' - பிரபல நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு உண்மையாகிறதா?

Tue Aug 6 , 2024
Third World War Will Start from this date, Indian Nostradamus Kushal Kumar makes prediction

You May Like