fbpx

’ஒமிக்ரான் வகை வைரஸ் அதிகளவில் உருமாற்றம்’..!! பாதுகாப்பா இருங்க..!! எச்சரிக்கும் பொது சுகாதாரத்துறை..!!

தமிழ்நாட்டில் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஓராண்டாக அதிகளவில் உருமாற்றம் அடைந்துள்ளது. தனது தன்மையை அதிகளவு மாற்றிக் கொண்டு இருந்தாலும் அதன் வீரியம் குறைவாக இருப்பதால் அதிக பாதிப்பு இல்லை என பொது சுகாதாரத்துறையின் பகுப்பாய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. குழந்தைகள், முதியவர்கள் இணை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும், ”இந்த வகை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், இருமல், தொண்டை வலி, சளி, சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படும். குறைவான எண்ணிக்கையில் சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம். அப்படியான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதிக பாதிப்புகள் ஏற்படுத்தாது என்பதற்காக மக்கள் கவன குறைவாக இருக்கக்கூடாது” என்று அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து பரவிய கொரோனா நோய் தொற்று, உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

4 வழிச்சாலை மாதிரி 4 திசைகளையும் இணைக்கும் ரயில் பாதை!… இந்தியாவில் எங்குள்ளது தெரியுமா?

Thu Feb 8 , 2024
ரயில் பாதைகள் எப்போதும் ஒன்றோடொன்று இணையாக இயங்குவதையும், அவற்றின் வழித்தடங்கள் அவற்றின் மூலம் தீர்மானிக்கப்படுவதை அனைவரும் அறிந்திருப்போம் . ஆனால், 4 வழிச் சாலைகளை போல இந்தியாவில் 4 திசை ரயில் பாதை இருக்கிறது. இந்த கிராசிங்கின் நிலை என்னவென்றால், எல்லாப் பக்கங்களிலிருந்தும் ரயில்கள் வருகின்றன, மேலும் ரயில்வே தண்டவாளத்தின் குறுக்குவெட்டு உள்ளது. இந்த இடத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, விபத்து ஏற்படாத வகையில் மிகவும் கவனமாக ரயில் இயக்கப்படுகிறது. […]

You May Like