fbpx

ஆம்னிப் பேருந்தில் சடலம்… பெண் ஐடி ஊழியர் மரணம்….. அதிர்ச்சி….

கோவைக்கு சென்ற ஐடி பெண் ஊழியர் ஆம்னி பேருந்தில் சடலமாக மீட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மதுக்கரை பாலத்துறை பகுதியில் வசித்து வருபவர் மகாலட்சுமி. இவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். மகாலட்சுமி கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், சென்னையில் இருந்து ஆம்னி பேருந்து மூலம் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். 

தனியார் சொகுசுப்பேருந்தின் கீழ் படுக்கையில் பயணம் செய்த மகாலட்சுமி கோவை காந்திபுரம் பகுதியில் பேருந்து நின்ற பிறகும் கீழே இறங்கவில்லை. இதனையடுத்து,

இறங்க வேண்டிய இடம் வந்தும் அந்த பெண் இறங்காததால் ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் பேரில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அவரிடம் காந்திபுரம் வந்த தகவலை கூறினர்.

ஆனால், சத்தம் எதுவும் இல்லாமல் இருப்பதை கண்ட ஓட்டுனரும், நடத்துனரும் அதிர்ச்சி அடைந்து உடனடியாக 108 ஆம்புலன்சிற்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மகாலட்சுமியை பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மகாலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் தீவிர விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா வரலாற்றில் முதல் முறையாக.. ‘இசையமைப்பாளரே இல்லாமல் இளையராஜா பயோபிக்..’

shyamala

Next Post

பெட்ரோல் பங்குகளில் இந்த வசதிகள் எல்லாம் இலவசமாகவே கிடைக்கும்..!! வாகன ஓட்டிகளே கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Fri May 17 , 2024
அரசு விதிப்படி சில வசதிகளை இலவசமாக கொடுத்தால் மட்டுமே பெட்ரோல் பங்க் உரிமம் வழங்கப்படும். இந்த வசதிகள் எதுவும் கிடைக்காத பட்சத்தில் அங்குள்ள புகார் புத்தகத்தில் உங்கள் கருத்தையும் எழுதலாம். பிறகு பெட்ரோல் பங்க் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, பெட்ரோல் பம்பில் நீங்கள் பெறக்கூடிய இலவச வசதிகள் எவை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கழிப்பறை வசதி: பெட்ரோல் பங்கில் கழிப்பறை வசதி கட்டாயம் இருக்க வேண்டும். இதில் பெண்கள், […]

You May Like