fbpx

அக்டோபர் 2ஆம் தேதி மாநிலம் முழுவதும்..!! தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

தமிழகம் முழுவதும் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளிலும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிராமப்புற மக்களின் குறைகளை கேட்டறிய குடியரசு தினம் (ஜன.26), தொழிலாளர்கள் தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆக.15), காந்தி ஜெயந்தி (அக்.2), உலக நீர் தினம் (மார்ச் 23), உள்ளாட்சிகள் தினம் (நவ.1) ஆகிய தினங்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் 12,525 கிராம ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தியன்று அக்.2 ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் ஊராட்சி தலைவர்கள், செயலாளர்கள் தலைமையில் நடைபெறும். இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வது, கிராம வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டம், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்…

பிரதமரின் ஊரக குடியிருப்பு திட்டம், பிரதமரின் கிராம சாலை திட்டம், தூய்மை பாரத இயக்கம், திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள், அனைவருக்கும் வீடு திட்ட கணக்கெடுப்பு, நெகிழி கழிவு மேலாண்மை ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும். எனவே, அனைத்து பொதுமக்களும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு கிராமங்களில் இருக்கும் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்துகொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது’’ என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

பிரபல நடிகர் ஆர்.கே.சுரேஷின் சொத்துக்கள் முடக்கம்..? ஆருத்ரா மோசடி வழக்கில் அதிரடி..!!

Tue Sep 26 , 2023
சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு ஆருத்ரா கோல்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. முதலீடுகளுக்கு 25 – 30% வரை வட்டி எனக்கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான புகாரில் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் கைதான ரூசோ என்பவரிடம் நடத்திய விசாரணையில், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் […]

You May Like