முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி , கட்டுரைப் போட்டிகள் நடத்துதல், அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் செயல்முறைகளை வெளியிட்டுள்ளார்
அதில், எதிர்வரும் 30.08.2023 மற்றும் 31.08.2023 ஆகிய நாட்களில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வட்டார அளவிலான பேச்சுப்போட்டி , கட்டுரைப் போட்டி மற்றும் கவிதைப் போட்டிகளை நடத்திட வேண்டும். மேலும் 10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மேற்கண்டுள்ள தலைப்புகளில் தனிப்பிரிவாக பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளை வட்டார அளவில் நடத்திட வேண்டும்.
வட்டார அளவிலான பிற மன்ற செயல்பாடுகளுக்கான போட்டிகள் குறித்த விவரம் தனியே அனுப்பி வைக்கப்படும். மேலும், 2022- 2023 ஆம் கல்வியாண்டில் பள்ளி அளவில் நடைபெற்ற மன்ற செயல்பாடுகள் மற்றும் வட்டார அளவிலான போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் விவரங்களை எதிர்வரும் 28.08.2023 க்குள் EMIS இணையதளத்தில் பள்ளி Login-ஐ பயன்படுத்தி உரிய விவரங்களை பதிவு செய்திட அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தகுந்த அறிவுரைகள் வழங்கவும் பள்ளித் துணை ஆய்வாளர்கள் இதனை தொடர்ந்து கண்காணித்து வட்டார அளவிலான போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்திட வேண்டும்.