fbpx

சூப்பர் நியூஸ்… இனி ஆன்லைன் மூலம் எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதி…!

வருவாய் துறை சார்பில் இணையவழியில் மூலமாக பொதுமக்கள் எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதியை முதல்வர் இன்று அறிமுகம் செய்ய உள்ளார்.

வருவாய்த்துறையானது மாநிலத்தின் சீரான சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கும்,  சாமானிய மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் முக்கிய பங்காற்றுகிறது. அரசின் பல்வேறு சமூகப் பொருளாதாரத் திட்டங்கள் இத்துறையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் வீடு மனை வாங்குவோர் அதற்கான பட்டாவில் பெயர் மாற்ற வேண்டும். பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பித்தால் தாலுகா அலுவலகங்களில் அதற்கான பணிகள் முறையாக நடப்பதில்லை. இப்பிரச்னைக்கு தீர்வாகபத்திரப்பதிவு அடிப்படையில் தானியங்கி முறையில் பட்டாவில் பெயர் மாற்றும் திட்டம் 2019-ல் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அநத திட்டம் சரியாக நடைமுறைப்படுத்தவில்லை.

வருவாய்த் துறையின் மூலமாக  25-க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் வழங்குவதில் மாவட்ட அளவிலான செயல்திறன் குறித்தும், எங்கு அதிகமாக பணிகள் நிலுவையில் இருக்கிறது என்பது குறித்தும், அவற்றை எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் களைவதற்கான வழிவகைகள் குறித்தும், மக்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்களின் நடைமுறையை மாற்றி  அமைத்து அதை எளிதாக அவர்களுக்கு வழங்க வேண்டிய வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும் என சமிபத்தில் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் வருவாய் துறை சார்பில் இணையவழியில் மூலமாக பொதுமக்கள் எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதி மற்றும் நகர்ப்புர புல வரைபடங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்க உள்ளார்.

Vignesh

Next Post

பொதுமக்கள் கவனத்திற்கு... இந்த பகுதிகளில் எல்லாம் இன்று காலை 9 மணி முதல் மின்தடை...!

Fri Sep 23 , 2022
தாம்பரம், பெரம்பூர் பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படும் என மின் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. தமிழக முழுவதும் மின்னிலயங்களை பராமரிக்கும் பணிக்காக அப்போது மின்தடை செய்வது வழக்கம் அந்த வகையில் இன்று மின் பராமரிப்பு பணி காரணமாக பெரம்பூர், தாம்பரம், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல பெரம்பூரில் பெரியார் நகர் 1, […]

You May Like