தஞ்சாவூர் பெரியகோயிலில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1038 -ஆவது சதய விழா அக்டோபர் 24ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது, மேலும் சதய நட்சத்திர நாளான 25ஆம் தேதி ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்திஇல் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 25ம் தேதி மாமன்னர் ராஜராஜ சோழன் சிலைக்கு, தமிழகம் முழுவதில் இருந்து வரும் பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற இருப்பதால், பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்தபடி, இந்த விழா அரசு விழாவாக நடைபெற உள்ளது.
பெரியகோயிலைக் கட்டி தமிழகத்துக்குப் பெருமை சேர்த்த மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை அவர் பிறந்த விண்மீனாகிய ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இரண்டு நாள்கள் சிறப்பாக விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி, நிகழாண்டு மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038 -ஆவது சதய விழா அக்டோபர் 24ஆம் தேதி தொடங்குகிறது. சதய நட்சத்திர நாளான 25ஆம் தேதி ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.