நடிகர் விஜய்க்கு பின் ஆலோசகராக இருப்பது ஜான் ஆரோக்கியசாமி என்ற அரசியல் ஆலோசகர் தான் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடந்தது. இந்த மாநாட்டில் விஜய் பேசிய விஷயங்கள் பெரியளவில் கவனம் பெற்றுள்ளன. விஜய் நேற்று அறிவித்த கொள்கைகள் சரி என்பவர்கள் இருக்கலாம்.. அதை ஏற்காதவர்கள் கூட இருக்கலாம். ஆனால், அவர் பேசிய விஷயங்கள் இணையத்தில் படு வைரலானது.
ஆதரித்தோ.. எதிர்த்தோ இந்த மாநாடு பற்றி பலர் பேச அந்த மாநாடு டிரெண்டானது. அரசியல்வாதி போல பேசாமல், நடிகர் போலவும் பேசாமல் வித்தியாசமான முறையில் மேடை நடுக்கம் இன்றி சரளமாக விஜய் பேசியது பெரிய அளவில் கவனம் பெற்றது. முக்கியமாக திராவிடம், பெரியார், மதவாதம் பற்றியெல்லாம் விஜய் பேசியது அரசியல் தலைவர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டது. அவரின் பேச்சு எப்படி இருந்ததோ இல்லையோ அவரின் பேச்சுக்கு பின் மிகப்பெரிய பயிற்சி இருந்தது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.
அவருக்கு நீண்ட பயிற்சி தந்த பின்பே மேடை ஏறியுள்ளார். அவர் மேடையில் எப்படி செயல்பட வேண்டும். என்ன பேச வேண்டும். எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும். மீட்டிங்கை எப்படி நடத்த வேண்டும். அதற்கு ஆட்கள் எப்படி நியமிக்கப்பட வேண்டும். பொறுப்புகளை எப்படி பிரித்து கொடுக்க வேண்டும் என்று முடிவுகள் முறையாக எடுக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் விஜய்க்கு பின்னணியில் இருந்தது ஜான் ஆரோக்கியசாமி என்ற அரசியல் ஆலோசகர் தான்.
தமிழக அரசியலில் மீண்டும், நீண்ட நாட்களுக்கு பின் ஆக்டிவ் ஆகி இருக்கும் அரசியல் ஆலோசகர்தான் ஜான் ஆரோக்கியசாமி. இவர், திருச்சியை சேர்ந்தவர். ஏற்கனவே பாமகவிற்கு தேர்தல் பணிகளை செய்துள்ளார். இவர், பாமகவின் பிரபலமான மாற்றம் முன்னேற்றம் அன்புமணி பிரச்சாரத்தை முன்னெடுத்தார். பாமக அந்த தேர்தலில் சறுக்கினாலும், ஜான் ஆரோக்கியசாமி முன்னெடுத்த அந்த பிரச்சாரம் இப்போதும் பிரபலம்.
இந்த நிலையில், நடிகர் விஜய்க்கு பின் ஆலோசகராக இருப்பது ஜான் ஆரோக்கியசாமிதான் என்ற தகவல் வெளியாகியுள்ளது. திராவிட கட்சிகளுக்கு மாற்றமாக பாமகவை அப்போது கொண்டு வந்த ஜான் ஆரோக்கியசாமி அதை பெரிய அளவில் டிரெண்ட் செய்தார். வடக்கிலும் கூட இவர் தேர்தல் பணிகளை செய்துள்ளார். மகாராஷ்டிராவில் தேர்தல் பணிகளை செய்த ஜான் ஆரோக்கியசாமி, தேசியவாத காங்கிரஸ் அங்கே கடந்த தேர்தலில் அதிக இடங்களை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
தற்போது ஜான் ஆரோக்கியசாமிதான் தவெக தலைவர் விஜய்க்கு பின் இருக்கும் அந்த மாஸ்டர்மைண்ட். கட்சி பணிகளை புஸ்ஸி ஆனந்த் கவனித்தாலும், அரசியல் வியூகங்களை வகுப்பது என்னவோ ஆரோக்கியசாமி தான் என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.
Read More : விஜய்யின் கொள்கை ”கருவாட்டு சாம்பார்”..!! ரெண்டு பேருக்கு ஒத்துப்போகாது..!! சீமான் கடும் விமர்சனம்..!!