fbpx

Annamalai: 27-ம் தேதி பெரிய லேகியம் விற்க போகிறோம்!… தமிழகத்திற்கு அதுதான் மருந்து!… அண்ணாமலை அதிரடி பேச்சு!

27 ம் தேதி பெரிய லேகியம் விற்க போகின்றோம், தமிழகத்தில் இருக்கும் பீடைக்கு எல்லாம் அதுதான் மருந்தாக இருக்க போகின்றது என்று தமிழக பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் “என் மண் என் மக்கள் யாத்திரை” இன்று நடைபெற்றது. மத்திய அமைச்சர்கள் ராஜீவ் சந்திரசேகர், எல் முருகன், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தின் முதல் தாமரை கோவையில் இருந்து இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. எதிர்கால இந்தியாவிற்கு பிரதமர் என்ன சொல்ல போகின்றார் என்பதை குடும்பத்துடன் பல்லடம் மாநாட்டிற்கு வந்து கேட்கவேண்டும்.

2021 க்கு பின்பு பிரதமர் பேச போகின்ற முதல் அரசியல் பேச்சு என தெரிவித்த அவர், தமிழக அரசியலில் மீண்டும் ஒரு மாற்றம் 2024 ல் ஏற்படும். மீண்டும் தேசிய கட்சி ஆட்சியில் பா.ஜ.க 40 க்கும் 40 இடங்களை பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். பூச்சாண்டி , மாயாண்டி மாதிரி இருக்கின்றேன், லேகியம் விற்பது மாதிரி இருகின்றேன் என்று சில அரசியல் தலைவர்கள் சொல்கின்றனர் என்றவர் ஆண்டி கோலத்துடன் யாத்திரையில் இருக்கின்றேன் என்பதை வரவேற்கின்றேன் என்றார்.

27 ம் தேதி பெரிய லேகியம் விற்க போகின்றோம், தமிழகத்தில் இருக்கும் பீடைக்கு எல்லாம் அதுதான் மருந்தாக இருக்க போகின்றது , குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் கூட்டமாக அது இருக்கும் எனவும் தெரிவித்தார்.

English summary: Annmalai BJP: On the 27th, we are going to sell a big legium

Readmore:எடப்பாடியார் அழைக்கிறார்.! விவசாயிகளுக்காக போராட்ட களத்தில் அதிமுக.! பிப். 29 தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.!

Kokila

Next Post

PMO Modi : 11 மாநிலங்களில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டத்தை தொடங்கி வைக்கும் பிரதமர்..‌!

Fri Feb 23 , 2024
நாட்டின் கூட்டுறவுத் துறையை வலுப்படுத்துவதற்கான ஒரு பெரிய முன்னெடுப்பாக, பிரதமர் நரேந்திர மோடி 2024 பிப்ரவரி 24 அன்று காலை 10:30 மணிக்கு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் கூட்டுறவுத் துறைக்கான பல முக்கியத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். 11 மாநிலங்களில் உள்ள 11 தொடக்க வேளாண் கடன் சங்கங்களில் (பிஏசிஎஸ்) மேற்கொள்ளப்படும் ‘கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டத்தின்’ முன்னோடித் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளார். […]

You May Like