fbpx

வரும் 28ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் எடப்பாடி, ஓபிஎஸை தனித்தனியே சந்திக்கும் பிரதமர்..!

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சென்னை வரும் பிரதமர் மோடி, தனித்தனியாக அழைத்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்டுள்ள போட்டி உச்சகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதிமுகவின் முக்கிய கூட்டாளியான பாஜக இந்த விசயத்தில் இன்னமும் மதில் மேல் பூனையாகவே உள்ளது. பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரது ஆதரவை பெற்று தங்களது நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தீவிரமாக உள்ளனர். இதை கருத்தில் கொண்டுதான் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்தவார இறுதியில் டெல்லிக்கு சென்றார்.

வரும் 28ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் எடப்பாடி, ஓபிஎஸை தனித்தனியே சந்திக்கும் பிரதமர்..!

புதிய ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டுவிட்டு அப்படியே பிரதமர் மோடியையும் சந்தித்து பேச வேண்டும் என்று அவர் திட்டமிட்டிருந்தார். அவரது இந்த திட்டம் வெற்றி பெறவில்லை. டெல்லியில் உள்ள பாஜக மூத்த தலைவர்களில் பெரும்பாலானவர்கள் அதிமுக இரு அணிகளாக இயங்குவதை விரும்பவில்லை. ஒன்றுபட்ட வலுவான கட்சியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். எனவே, பிரச்சனைகளை பேசி தீர்த்துக்கொண்டு சமரசமாக செல்ல முடியாதா என்று அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். பாஜக மூத்த தலைவர்களின் இந்த மனநிலையை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் விரும்பவில்லை.

வரும் 28ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் எடப்பாடி, ஓபிஎஸை தனித்தனியே சந்திக்கும் பிரதமர்..!

அதிமுகவில் ஓபிஎஸை சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்பதை திட்டவட்டமாக பாஜக மேலிடத்தில் தெரிவித்து உள்ளனர். இதில், பிரதமர் மோடி என்ன முடிவெடுக்க போகிறார் என்பது புரியாத புதிராக உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடக்கும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக சென்னை வர உள்ளார். அன்று மதியம் குஜராத் மாநிலத்தில் இருந்து தனி ராணுவ விமானத்தில் புறப்பட்டு வரும் அவர் அன்று மாலை நேரு விளையாட்டு அரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இரவு 8 மணி வரை அவர் அந்த நிகழ்ச்சியில் இருப்பார் அதன்பிறகு அவர் கிண்டி கவர்னர் மாளிகைக்கு சென்று அங்கு இரவு தங்க உள்ளார். அன்று இரவு 8.30 மணியில் இருந்து முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை நடத்த அவர் திட்டமிட்டு உள்ளார்.

வரும் 28ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் எடப்பாடி, ஓபிஎஸை தனித்தனியே சந்திக்கும் பிரதமர்..!

அப்போது எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பிரதமர் மோடியை தனித்தனியாக சந்தித்து பேசுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்புக்கு பிறகே எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரது அடுத்த கட்ட நடவடிக்கைகளில் எத்தகைய மாற்றம் ஏற்படும் என்பது தெரியவரும். எனவே, நாளை மறுநாள் இரவு நடக்கப்போகும் சந்திப்பு அதிமுகவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Chella

Next Post

கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த ரவுடியை வெட்டிக்கொன்ற மர்ம நபர்கள்..! போலீசார் தீவிர விசாரணை..!

Tue Jul 26 , 2022
ஜாமீனில் வெளிவந்த ரவுடியை மர்ம நபர்கள் வெட்டிக்கொன்ற சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் கம்மியம்பேட்டை, பிடாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கருப்பு என்கிற கண்ணன் (வயது 24). ரவுடியான இவர் மீது திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி, கஞ்சா புழக்கம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், நேற்று மாலை அவர் கம்மியம்பேட்டை பி.ஆர்.எஸ்.வெங்கடேசன் நகரில் தனது நண்பர்களுடன் நின்று […]

You May Like