தமிழ்நாடு அரசு முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 100 சிறப்பு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை தமிழ்நாடு முழுவதும் நடத்திட அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படித்து, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், காஞ்சிபுரம் இணைந்து காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் 05.08.2023 சனிக்கிழமை அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இம்முகாமல் 100 க்கும் மேற்பட்ட தணியார் நிறுவனங்கள் மற்றும் திறண் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துக் கொண்டு தங்களுக்கான மனித வளதேவைக்கு நேர்முக தேர்வினை நடத்த உள்ளனர். அது சமயம் பட்டதாரிகள், டிப்ளமோ.ஐ.டி.ஐ, 12வது மற்றும் 10ஆம் வகுப்பு படித்தவர்கள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
18 முதல் 35 வயது வரை உள்ள வேலை நாடுநர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் 05.08.2023 அன்று காலை 9.00 மணிக்கு காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறும், ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் இது தொடர்பாக, 044-27237124என்ற தொலைபேசி எண் வாயிலாக தெரிந்துகொள்ளலாம்.