fbpx

புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவையொட்டி ரூ. 75 நாணயம் அறிமுகம் – மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவை முன்னிட்டு ரூ. 75 நாணயத்தை புழக்கத்திற்கு விடப்போவதாக மத்திய நிதித் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. புதிய நாணயத்தின் ஒருபுறம் அசோகா சின்னமும், அதன் கீழே சத்யமேவ ஜெயதே என்ற வார்த்தையும் இடம்பெறுகிறது. இடதுபுறத்தில் பாரத் என்ற வார்த்தை தேவனகிரியிலும், இந்தியா என்ற வார்த்தை ஆங்கிலத்தில் வலதுபுறமாக இடம்பெறுகிறது. இந்திய ரூபாய் சின்னம் மற்றும் 75 என்ற எண் அசோகா சின்னத்தின் கீழ் இடம்பெறுகிறது. நாணயத்தின் மற்றொரு புறத்தில் பாராளுமன்ற கட்டிடத்தின் படம் இடம்பெறுகிறது. இந்த நாணயத்தில் 50 சதவீதம் சில்வர், 40 சதவீதம் செம்பு, 5 சதவீதம் நிக்கல் மற்றும் 5 சதவீதம் ஜின்க் இடம்பெற்று இருக்கும். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி மே 28 ஆம் தேதி திறந்து வைக்கிறார்.

Baskar

Next Post

சென்னை மெரினா நீச்சல் குளம் அருகே……! 2 பைக் திருடர்கள் அதிரடி கைது……!

Fri May 26 , 2023
சென்னை மெரினா கடற்கரையில் நேற்று முன் தினம் இரவு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான விதத்தில் மெரினா நீச்சல் குளம் அருகே 2 இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அவர்கள் திருநின்றவூரில் இருப்பது தெரியவந்தது. அவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அவர்கள் பிரபல இருசக்கர வாகனம் திருடரான திருநின்றவூரை சேர்ந்த 17 வயது சிறுவனும் அவருடைய நண்பனமான சத்திய […]
வரதட்சணை கேட்காமல் லட்சக்கணக்கில் புரோக்கர் கமிஷன்..!! திருமணம் முடிந்தும் சிங்கிளாக சுத்தும் இளைஞர்..!!

You May Like