fbpx

சுதந்திர தினத்தன்று காஷ்மீரில் காவல் கட்டுப்பாட்டு அறை மீது; பயங்கரவாதிகள் கையெரி குண்டு வீச்சு..!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புட்காம் மற்றும் நகர் மாவட்டங்களில், இரண்டு வெவ்வேறு இடங்களில் நடந்த கையெறி குண்டுத் தாக்குதல்களில், காவல்துறை அதிகாரி ஒருவரும் பொதுமக்களில் ஒருவரும்காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் புட்காம் மாவட்டத்தின் சதுராவில் இருக்கும் குடியிருப்பு மீதும், நகரில் இருக்கும் காவல் கட்டுப்பாட்டு அறை மீதும் கையெறி குண்டு தாக்குதலை பயங்கரவாதிகள் நடத்தினர்.

புட்காமின் கோபால்போரா சதுரா பகுதியில் பயங்கரவாதிகள் வீசிய கையெறி குண்டில் கரண் குமார் சிங் என்பவர் காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக நகரில் இருக்கும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதேபோல், நகரில் இருக்கும் காவல் கட்டுப்பாட்டு அறை மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியதில் காவலர் ஒருவர் காயமடைந்தார்.

அவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர் சம்பவங்களால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதி முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டு பயங்கரவாதிகளை தேடும் பணி நடந்து வருகிறது.

Baskar

Next Post

”கோல்ட் காஃபி, பலாப்பழ ஐஸ்கிரீம்”..! ஆவினின் அசத்தல் அறிவிப்புகள்..! லிஸ்ட் இதோ.!

Tue Aug 16 , 2022
தமிழகத்தில் ஆவின் நிறுவனம் மூலம் பால், ஐஸ்கிரீம், இனிப்பு, நெய் உள்ளிட்ட பால் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆவின் நிறுவனம் புதிதாக 10 புதிய பொருட்களை அறிமுகம் செய்யவுள்ளது. புதிய பொருட்களின் விவரங்கள்.. 1. பலாப்பழ ஐஸ்கிரீம் (Jackfruit Ice Cream) 2. வெள்ளை சாக்லேட் (White Chocolate ) 3. குளிர்ந்த காஃபி (Cold Coffee) 4. வெண்ணெய் கட்டி (Butter Chiplets) 5. […]
”கோல்ட் காஃபி, பலாப்பழ ஐஸ்கிரீம்”..! ஆவினின் அசத்தல் அறிவிப்புகள்..! லிஸ்ட் இதோ.!

You May Like