fbpx

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’!… 5000 பேர் கருத்து தெரிவிப்பு!… உயர்மட்ட குழு அதிகாரிகள் தகவல்!

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக 5000 பேரிடம் இருந்து கருத்துகள் பெற்றுள்ளதாக உயர்மட்ட குழு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற மக்களவைக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் (ஒரே நாடு ஒரே தேர்தல்) நடத்துவது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் எழுந்து வருகின்றன. இதில் முக்கியமாக, தேர்தல் நடைமுறையில் இந்த மாற்றத்தை மீண்டும் கொண்டு வருவதன் மூலம் நாட்டின் வளர்ச்சிப் பணிகள் முடுக்கிவிடப்படும் என்பது ‘ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு’ ஆதரவளிக்கும் தரப்பினரின் கருத்தாக உள்ளது. ஏனெனில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும் என்பதால் புதிய திட்டங்கள், வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்புகள் உள்ளிட்ட எதையும் தேர்தல் முடியும் வரை அரசால் அறிவிக்க முடியாது.

தற்போதைய நடைமுறையின்படி, ஆண்டுதோறும் ஏதேனும் சில மாநிலங்களின் சட்டமன்றத்திற்கு தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. அதன் காரணமாக நாட்டின் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுகின்றன என்பது அதை ஆதரிப்போரின் வாதமாக உள்ளது. அத்துடன், ஒரே நாடு ஒரே தேர்தல் முறையால், தேர்தல் செலவுகள் வெகுவாகக் குறையும், அரசுப் பணியாளர்களை அவ்வப்போது தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டிய அவசியம் இருக்காது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

இந்தநிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக ஜனவரி 15ம் தேதிக்குள் பொதுமக்கள் கருத்து கூறலாம் எனவும் ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்த சட்டங்களில் திருத்தம், நிர்வாக கட்டமைப்பு மாற்றம் குறித்து ஆலோசனை அனுப்பலாம் என்றும் இந்த பரிந்துரைகளை onoe.gov.in அல்லது sc-hic@gov.in என்ற மின்னஞ்சலில் அனுப்பலாம் எனவும் ஒரே நாடு, ஒரே தேர்தல் குழு செயலாளர் தகவல் தெரிவித்திருந்தார். அதன்படி, ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக 5 ஆயிரம் பேர் தங்கள் கருத்துகளை இமெயில் மூலம் அனுப்பியுள்ளனர் என உயர் மட்ட குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்துக்கு ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்ட குழுவை கடந்த ஆண்டு ஒன்றிய அரசு நியமித்தது. இந்த குழு இரண்டு முறை கூடியுள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு அனைவரும் ஏற்கக்கூடிய வகையிலான தேதி மற்றும் கருத்துகள் ஆகியவற்றை வழங்குமாறு அரசியல் கட்சிகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. இதுவரை 6 தேசிய கட்சிகள்,33 மாநில கட்சிகள்,பதிவு பெறாத 7 கட்சிகளுக்கு இந்த குழு கடிதம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

’ஜக்கம்மா மாயம்மா’..!! ’அருந்ததி’ படத்தில் மிரட்டிய பேய் பங்களா..? எங்கு இருக்கு தெரியுமா..?

Thu Jan 11 , 2024
நடிகை அனுஷ்கா நடிப்பில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த அருந்ததி திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியிடப்பட்டது. இப்படத்தை கொடி இராமக்கிருஷ்ணா இயக்கினார். இந்த படத்தில், மனோரமா, சோனு சூட், சாயாஜி ஷிண்டே உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் அதிக வசூல் செய்த இரண்டாவது தெலுங்குத் திரைப்படம் என்னும் சாதனையை படைத்தது. தெலுங்கில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளத்தில் இதே பெயரில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. இந்நிலையில், […]

You May Like