fbpx

ஒருநாள் நீட்டிக்கப்பட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்!… முக்கிய மசோதா நிறைவேற்ற திட்டம்!… மாலை 5 மணிக்கு உரையாற்றும் பிரதமர்!

விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 1ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் எதிர்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வந்தனர். இருப்பினும் சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் அயோத்தி ராமர் கோயில் தொடர்பான ‘நன்றி தெரிவிக்கும் தீர்மானம்’ நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. விதி 193ன் கீழ் இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது. மக்களவையில், பாஜக எம்பிக்கள் சத்ய பால் சிங், பிரதாப் சந்திர சாரங்கி மற்றும் சந்தோஷ் பாண்டே ஆகியோர் முன்மொழிகிறார்கள். மாநிலங்களவையில், இந்த தீர்மானம் விதி 176ன் கீழ் பாஜக எம்.பி.க்கள் கே.லக்ஷ்மன், சுதன்ஷு திரிவேதி மற்றும் ராகேஷ் சின்ஹா​​ஆகியோரால் தாக்கல் செய்யப்படும்.

தீர்மானத்தில் ‘ராமர், இந்தியா மற்றும் இந்தியத்தன்மையின் சின்னம்’, ‘ராமர், இந்திய கலாச்சாரத்தின் சின்னம்’, ‘ராமர், ஒரே தேசம், வலிமையான தேசம் என்பதன் அடையாளம்’ என மூன்று அம்சங்கள் இருக்கும். இந்த தீர்மானத்திற்காகவே பட்ஜெட் கூட்டத்தொடர் மேலும் ஒரு நாள் நீடிக்கப்பட்டிருக்கிறது. பிப்ரவரி 9ம் தேதியுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைய இருந்த நிலையில், ஒரு நாள் நீடிக்கப்பட்டு பிப்ரவரி 10ம் தேதி இன்றுடன் கூட்டத்தொடர் நிறைவுறுகிறது.

முன்னதாக பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி “2024 ஆம் ஆண்டிற்கு உங்கள் அனைவருக்கும் ‘ராம் ராம்’ வாழ்த்துக்கள்” என கூறியிருந்தார். இதனை தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரையிலும் ராமர் கோயில் குறித்து இடம்பெற்றிருந்தது. இன்றயை தினம் ராமர் கோயில் குறித்து தீர்மானம் கொண்டுவரப்பட இருப்பதால் அனைத்து எம்பிக்களும் நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும் பாஜக தனது எம்பிக்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

Kokila

Next Post

குழந்தைகளுக்கு பிடித்த ரசமலாய்.! 10நிமிடத்தில் ஈசியாக எப்படி செய்யலாம்.!?

Sat Feb 10 , 2024
பொதுவாக குழந்தைகளுக்கு இனிப்பு என்றாலே மிகவும் பிடிக்கும். அப்படியிருக்க பாலாடையை வைத்து செய்யப்படும் ரசமலாயை பிரெட் துண்டுகளை வைத்து இன்ஸ்டென்டாக எப்படி செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம். குழந்தைகளுக்கு விடுமுறை நாட்களில் இதை செய்து கொடுத்து அசத்துங்க. தேவையான பொருட்கள்: பிரெட் துண்டுகள்- 5, பால்- 1 லி, முந்திரி- 20, சர்க்கரை- 6 டேபிள் ஸ்பூன், குங்குமப்பூ- 5, ஏலக்காய் தூள்- ¼ ஸ்பூன், நெய்- 2 ஸ்பூன் […]

You May Like