உடலில் கொலஸ்ட்ரால் அளவு உயர்ந்தால் இதய நோய் மற்றும் பக்கவாதம் வரும் ஆபத்து அதிகரிக்கும். எனவே, கொலஸ்ட்ராலை குறைப்பதற்கான வழிமுறைகளை இந்தப் பதிவில் பார்ப்போம்.
காலையில் எழுந்ததும் ஆரோக்கியமான பழக்கங்களை பின்பற்றினால் நம்முடைய உடல்நலம் சிறப்பாக இருக்கும். எந்த மருந்தும் இல்லாமல் இயற்கையான முறையில் உங்கள் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க விரும்பினால், சில காலை நேர பழக்கங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும். இந்த 9 காலை நேர பழக்கங்களையும் தொடர்ந்து கடைபிடித்து வந்தால் ஒரு மாதத்திற்குள் உங்கள் கொலஸ்ட்ரால் அளவு குறைந்துவிடும்.
ஆரோக்கியமான உணவு : ஊட்டச்சத்து நிறைந்த உணவை காலை நேரத்தில் சாப்பிடுவது கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும். பழங்கள், நார்ச்சத்து நிறைந்த உணவுகள், முழு தானியங்கள் ஆகியவற்றை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். தினமும் 5 முதல் 10 கிராம் அளவு கரையக்கூடிய நார்ச்சத்து உணவை சாப்பிட்டு வந்தால், கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு 5% குறையும் என ஆய்வுகள் கூறுகின்றன.
க்ரீன் டீ : க்ரீன் டீயில் உள்ள கேடசின் என்ற ஆன்டி ஆக்ஸிடெண்ட் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. இனிமேல் காலையில் எழுந்ததும் வழக்கமான காஃபிக்கு பதிலாக க்ரீன் டீ பருகுங்கள்.
ஆரஞ்சு ஜூஸ் : காலையில் ஒரு க்ளாஸ் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பது கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும். ஆரஞ்சு பழத்தில் அதிகளவு ஃப்ளாவோனாய்டு உள்ளது. 4 வாரங்கள் தொடர்ந்து 750 மில்லி ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கலாம்.
காலை நடைபயிற்சி : காலையில் நடைபயிற்சி செல்வது உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அளவை உயர்த்துவதோடு கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும். தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
பாதாம் : பாதாமில் அதிகளவு நிறைவுறா கொழுப்புகள் உள்ளது. இது உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கவும், கெட்ட கொலஸ்ட்ரால் அளவை உயர்த்தவும் உதவும். ஆகையால், காலையில் ஒரு கைப்பிடியளவு பாதாம் சாப்பிடுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.
தியானப் பயிற்சி : காலையில் தியானம் செய்வது மன அழுத்தத்தை குறைப்பதோடு உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கும். தினமும் 10 நிமிடங்களாவது அமைதியாக உட்கார்ந்து மூச்சுப் பயிற்சியில் ஈடுபடுங்கள்.
ஆலிவ் ஆயில் : சமையலுக்கு வெண்ணெய் அல்லது காய்கறி எண்ணெய்க்கு பதிலாக ஆலிவ் ஆயிலை பயன்படுத்தும் போது நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு குறையும்.
Read More : இல்லற வாழ்க்கையில் ஆர்வம் குறைய என்ன காரணம்..? ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல்..!!