fbpx

சென்னையில் மேலும் ஒரு சுங்கச்சாவடி மூடப்படுகிறது..!! மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்..!!

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் நடந்து வருவதால், பழைய மகாபலிபுரம் ராஜீவ் காந்தி சாலையில் உள்ள நாவலூரில் அமைந்திருக்கும் சுங்கச்சாவடியை மூடுவதற்கு தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகம் மாநில அரசிடம் பரிந்துரை செய்துள்ளது.

டோல் பிளாசாவில் பயனர் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த உள்ளூர் குடியிருப்போர் சங்கங்கள் பல கோரிக்கை வைத்தன. இங்கே பயணம் செய்யும் மக்கள் பலரும் பல காலமாக இதே கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கை தற்போது ஏற்கப்பட்டுள்ளது. ஆனால், மெட்ரோ பணிகள் முடிந்து 1 – 2 வருடம் கழித்து மீண்டும் அங்கு டோல் பிளாசா திறக்கப்பட வாய்ப்புள்ளது.

சுங்கச்சாவடியை மூடுவதற்கு அரசுக்கு கருத்து அனுப்பியுள்ளோம். உரிய அனுமதி கிடைத்தவுடன் மூடப்படும் என்று தமிழ்நாடு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் மெட்ரோ 2ஆம் கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், 2024-இல் திறக்கப்பட உள்ள புதிய மெட்ரோ ரூட் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, கோடம்பாக்கத்தில் உள்ள பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 16 கி.மீ., லைன் கட்டுமானப் பணிகள் 2024இல் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாதையில் உள்ள 18 நிலையங்களில் 13 ரயில் நிலையங்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கான்கோர்ஸ் மற்றும் டிக்கெட் கவுண்டர் அமைப்பதில் பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 26 கிமீ மெட்ரோவின் ஒரு பகுதியாக இந்த 16 கிமீ மெட்ரோ ரூட் உள்ளது. 116.1 கிமீ தூரத்திற்கு வர இருக்கும் 2ஆம் கட்ட திட்டம் இரண்டு கட்டங்களாக 2025 மற்றும் 2028-க்கு இடையில் கட்டங்களில் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் தான், பழைய மகாபலிபுரம் ராஜீவ் காந்தி சாலையில் உள்ள நாவலூரில் அமைந்திருக்கும் சுங்கச்சாவடியை மூடுவதற்கு தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகம் மாநில அரசிடம் பரிந்துரை செய்துள்ளது. ஏற்கனவே பெருங்குடி, துரைப்பாக்கம், மேடவாக்கம் – சோழிங்கநல்லூர் சாலை மற்றும் ECR- OMR இணைப்புச் சாலை ஆகிய இடங்களில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகள் மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஆகஸ்ட் 2021 இல் மூடப்பட்டன. தற்போது நாவலூர் பிளாசா மூடப்படுகிறது. இதனால் தினமும் 7 லட்சம் வரை இழப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

மற்றொரு போர்க்கப்பலை நிறுத்திய அமெரிக்கா?… பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஈரான்!… அச்சத்தில் உலக நாடுகள்!

Wed Oct 18 , 2023
இஸ்ரேல்- ஹமாஸ் போர் உச்சமடைந்துள்ள நிலையில், கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதிக்கு உலகின் மிகப் பெரிய விமானம் தாங்கி கப்பலை அனுப்பி அமெரிக்கா ராணுவ ரீதியாகத் தலையிட்டுள்ளதாக ஈரான் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது. ஜெர்மன் தாக்குதலிலிருந்து தப்பி வந்த யூதர்களுக்கு, பாலஸ்தீனர்கள் அடைக்கலம் கொடுத்தனர். ஆனால் அதன் பின்னர் ஐநா சபை 1947ம் ஆண்டு பாலஸ்தீனத்திலிருந்து பாதிக்கும் அதிகமான பகுதியை பிரித்து கொடுத்து இஸ்ரேலை உருவாக்க முடிவெடுத்தது. இதற்கு பாலஸ்தீன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் […]

You May Like