பல்கேரியாவை சேர்ந்த பாபா வாங்கே, தன்னுடைய 85ம் வயதில் அதாவது 1996-ம் வருடம் இறந்துவிட்டார். தன்னுடைய 12 வயதில் பார்வையை இழந்தவர் பாபா வாங்கா.. உலகத்தில் நிகழக்கூடிய முக்கிய நிகழ்வுகளை கணித்து சொன்னவர். அந்தவகையில், நூற்றுக்கும் அதிகமான தகவல்களை கணித்து சொல்லியிருந்த நிலையில், அவைகளில் 85 சதவீதத்துக்கும் மேல் பலித்திருக்கின்றன.. பல்வேறு காலகட்டத்தில், பெரும்பாலான சம்பவங்கள் அவர் சொன்னதுமே போலவே நடந்திருக்கின்றன.
பாபா வங்கா, 9/11 பயங்கரவாத தாக்குதல்கள், இளவரசி டயானாவின் மரணம், செர்னோபில் பேரழிவு மற்றும் பிரெக்ஸிட் போன்ற சில முக்கிய உலக நிகழ்வுகளை முன்னறிவித்ததாகக் கூறப்படுகிறது. அந்தவகையில், 2025ம் ஆண்டில் ஏற்பட போகும் பேரழிவுகள், போர், அரசியல் தலைவர்கள் குறித்தும் கணித்துள்ளார். அந்த கணிப்புகள் உண்மையாக தொட்ங்கியதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மியான்மரின் சகாயிங் நகரின் வடமேற்கே, கடந்த 28ம் தேதி, 7.7 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்த நில நடுக்கத்தால், வானுயர்ந்த கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், வீடுகள் உள்ளிட்டவை தரைமட்டமாகின. பாலங்கள், அணைகள் இடிந்து விழுந்தன. இதுவரை, மியான்மரில் 2,886 பேர் இறந்துள்ளதாகவும், மேலும் 4,639 பேர் காயமடைந்துள்ளர். மற்றும் 441 பேர் இன்னும் காணவில்லை, வரும் நாட்களில் இறப்பு எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூகம்பங்கள் பற்றிய பாபா வாங்காவின் கணிப்பு உண்மையாகி வருவதால், மக்கள் இப்போது உலகத்தைப் பற்றி அந்த ஆன்மீகவாதி கூறிய பிற விஷயங்களைப் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
2025 ஆம் ஆண்டிற்கான அவரது பிற கணிப்புகளில் ஐரோப்பாவில் ஒரு போர் மற்றும் உலகம் முழுவதும் ஒரு பொருளாதார பேரழிவு ஆகியவை அடங்கும். 2025 ஆம் ஆண்டு மனிதகுலத்தின் வீழ்ச்சியின் தொடக்கத்தைக் குறிக்கும் என்று பாபா வாங்கா கூறியதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. மியான்மர் நிலநடுக்கம் ஏற்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஓசியானியா நாடான டோங்காவில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. பசிபிக் தீவு நாட்டிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும், உயிர் மற்றும் சொத்து இழப்பு எதுவும் ஏற்படவில்லை.
பாபா வாங்கா 1996 இல் இறப்பதற்கு முன்பு பல முக்கிய உலக நிகழ்வுகளை முன்னறிவித்தார். 2025 இல் ஐரோப்பாவில் ஒரு போர் தொடங்கும் என்றும், அது கண்டத்தின் மக்கள்தொகையை பேரழிவிற்கு உட்படுத்தும் என்றும் அந்த அவர் கணித்தார். அவரது மற்றொரு கணிப்புகளில் ஒன்றின்படி, மனிதர்கள் மாற்று ஆற்றல் மூலங்களுக்காக மற்ற கிரகங்களைத் தேடத் தொடங்கலாம்.
வரும் 2028ஆம் ஆண்டில் மனிதன் வீனஸ் செல்வான், பசி ஒழியும் என அவரது கணிப்புகள் தெரிவிக்கின்றன. 2043ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் இஸ்லாமிய பெரும்பான்மை ஏற்படும், 2066ஆம் ஆண்டில் சுற்றுச்சூழலை மறுகட்டமைக்கும் ஆயுதத்தை அமெரிக்க உருவாக்கும். 76ல் சமூகத்தின் சாதி கட்டமைப்பு ஒழியும் என கணிக்கப்பட்டுள்ளது.
Read more: செக் புக் பயன்படுத்துறீங்களா? இந்த விஷயத்தில் கவனமா இருக்கணும்!