fbpx

பொதுத்துறை வங்கியில் வேலை.. ரூ.31 ஆயிரம் சம்பளம்.. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!!

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஐடிஐபி வங்கியில் காலியாக உள்ள 1000 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்..

பணியிடங்கள் ; 

எக்ஸ்கியூட்டிவ் சேல்ஸ் மற்றும் ஆபரேசன்ஸ் (ESO) – 1000 பணியிடங்கள்.

துப்பிரிவினருக்கு 448 இடங்கள்,

எஸ்.டி பிரிவினருக்கு 94

எஸ்.சி : 127,

ஒபிசி: 231,

மாற்றுத்திறனாளிகள் : 40

கல்வித்தகுதி : இந்த பணியிடங்களுக்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.

வயது வரம்பு : வயது வரம்பை பொறுத்தவரை 20 வயது முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.

சம்பளம் : தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இரண்டு ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். முதல் ஆண்டில் ரூ.29 ஆயிரம் மாத சம்பளமாக வழங்கப்படும். இரண்டாவது ஆண்டில் ரூ.31 ஆயிரம் வழங்கப்படும். டிஏ உள்பட இதர சலுகைகள் எதுவும் கிடைக்காது.

விண்ணப்பிக்கும் முறை:

எக்ஸ்கியூட்டிவ் சேல்ஸ் மற்றும் ஆபரேசன்ஸ் பணியிடங்களுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கட்டணமாக ரூ. 1050/- செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினர் ரூ. 250 செலுத்த வேண்டும். ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.https://www.idbibank. என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு நடைறும். தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, கோவை, ஈரோடு, நாகர்கோவில், சேலம், திருச்சி, நெல்லை, வேலூர், விருதுநகர் ஆகிய நகரங்களில் நடைபெறும்.

Read more ; 4 மணி நேரத்திற்கு முன்னாடி டிக்கெட் புக் செய்தால் போதும்.. ரயில்களில் சீட் கட்டாயம் கிடைக்கும்..!! எப்படி தெரியுமா?

English Summary

One of the public sector banks, IDBI Bank has released a notification to fill 1000 vacancies.

Next Post

இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு..!! மாத சம்பளம் ரூ.56,000..!! திருமணமாகாதவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்..!!

Mon Nov 18 , 2024
Indian Army has published an employment notification for short service commission for Advocate General Branch.

You May Like