fbpx

’ஒரு போன் போட்டா போதும் பிக்பாஸ் வீட்டை அடித்து நொறுக்கி விடுவாங்க’..!! எச்சரிக்கும் பிரபலம்..!!

பிக்பாஸ் வீட்டில் பிரதீப் வெளியேற்றப்பட்ட நாளில் இருந்து சோசியல் மீடியாவில் அவருக்கு ஆதரவாக #justiceforpradeep என்ற ஹேஷ் டேக் வைரலாகி வருவதோடு, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக பல கண்டன குரல்களும் ஓங்கி வருகின்றது. பிக்பாஸ் வீட்டில் பெண்களிடம் தவறான அணுகுமுறையில் பழகியது என எல்லாரும் ஒன்று சேர்ந்து பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பினார்கள். இவர்களுக்கு ஆதரவாக கமலும் பேசியது பெரும் கோபத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், சமூக ஆர்வலர் ராஜேஸ்வரி பிரியா பிக்பாஸ் சீசன் 7 பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், ”இப்போ ஒரே ஒரு போன் போட்டா போதும் பிக்பாஸ் வீட்டை போய் அடித்து நொறுக்கி விடுவாங்க. கலாச்சாரத்தின் சீர்கேடே பிக்பாஸ் நிகழ்ச்சி தான். அதுவும் நிக்சனும் ஐசுவும் சேர்ந்து செய்கிற காரியத்த பார்க்கும்போது கலாச்சாரம் எங்க போகுதுன்னே தெரியல. ஐசு கட்டி இருந்த வேட்டிய தூக்கி சரி செய்தார் நிக்சன். இதெல்லாம் பார்க்கத் தப்பா தெரியலையா?

ஆனால், கமல் சொல்வது போன்று அவர் ஒரு தவறை தண்டிக்க கூடியவராக இருந்தால் அதை விட்டுக் கொடுத்துப் போக மாட்டார். சிறிய தண்டனையாவது கொடுப்பார். மன்னிப்பு கூட கேட்க சொல்லுவார்கள. ஆனால், அதையெல்லாம் விட்டுவிட்டு இவ்வளவு நாள் பிரதீப்பை பேச விட்டு வேடிக்கை பார்த்து இப்போது அவரை வெளியேற்றி வைத்திருப்பது மக்களை ஏமாற்றுவதற்கு சமம்.

அதுபோல இந்த நிகழ்ச்சி மூலம் தவறான கலாச்சாரத்தை புகுத்துகிறார்கள். ஆபாச உடைகளை பெண்கள் அணிகிறார்கள். அதுமட்டுமா? உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் சிலர் பேசும் டாப்பிக் கூட ரொம்ப மோசமாகவே இருக்கிறது” என்று கடுமையாக விளாசியுள்ளார்.

Chella

Next Post

நள்ளிரவில் கேட்ட அந்த சத்தம்..!! கதவை திறந்த ஊர் மக்கள்..!! வசமாக சிக்கிய கள்ளக்காதல் ஜோடி..!!

Sat Nov 11 , 2023
ஜார்க்கண்ட் மாநிலம் கிரித் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நபரை திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் ஆன நிலையில், கணவர் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். இதனால், கான்புராவில் உள்ள கிராமத்திற்கு அவரது மனைவி சென்றுள்ளார். அப்போது, இவருக்கு இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து, இவர்கள் அடிக்கடி இரவில் ரகசியமாக சந்தித்து உடலுறவு வைத்து வந்துள்ளனர். இந்நிலையில், […]

You May Like