fbpx

புகைப்படம் ஒன்னே போதும்!… கூகுளை போல் AI தொழில்நுட்பத்திலும் வந்துவிட்டது புதிய வசதி!… மைக்ரோசாப்ட் அறிவிப்பு!

கூகுளை போல் AI தொழில்நுட்பத்தில் புகைப்படங்களை வைத்து தேடும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இணையம் என்பது தற்போதைய வாழ்வில் மிகவும் அவசியமான விஷயங்களில் ஒன்றாகி விட்டது. பள்ளி மாணவர்கள் முதல் பணிக்கு செல்பவர்கள், வயது முதிர்ந்தவர்கள் வரை இணையத்தை பயன்படுத்துகின்றனர். இணையத்தில் தங்களுக்குய தேவையான தகவல்கள் அனைத்தையும் தேடுவதற்கு மக்கள் கூகுள் குரோம் ஐ தான் உலக அளவில் அதிகம் பயன்படுத்துகின்றனர். அதாவது கூகுள் குரோம் பயன்படுத்தாத ஆட்களே இல்லை என்னும் நிலை உள்ளது. கூகுளில் நாம் புகைப்படத்தை கொண்டு தேடுகையில் அது சம்பந்தமான தகவல்கள் பயனர்களுக்கு கிடைக்கும். அந்தவகையில், செயற்கை நுண்ணறிவான AI தொழில்நுட்பத்திலும் தற்போது புகைப்படங்களை கொண்டு தேடும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள செயற்கை நுண்ணறிவு திறனான AIஇல் புகைப்படத்தை பதிவிடுகையில் அது சம்பந்தமான தரவுகளை பயனர்கள் பெற முடியும் என மைக்ரோசாப்ட் நிறுவன துணைத் தலைவர் யூசுப் மெஹ்தி தெரிவித்தார். ஏற்கனவே, AI தொழில்நுட்ப வசதிகளில் பயனர்கள் தங்கள், சந்தேகங்ககள் கேள்விகளை பதிவிட்டால் அதற்கு தகுந்த பதிலை AI தருகிறது.

Kokila

Next Post

தலைவர்கள், உயரதிகாரிகள் பற்றிய அவதூறு வீடியோக்களை நீக்குக!... யூடியூப் நிறுவனங்களுக்கு கடிதம்!... தமிழ்நாடு சைபர் கிரைம் அதிரடி!

Sat May 6 , 2023
ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள், உயரதிகாரிகள் குறித்த 386 அவதூறு வீடியோக்களை முடக்கக் கோரி யூடியூப் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர். ட்விட்டர், ஃபேஸ்பும், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில், தமிழ்நாடு ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் குறித்து அவதூறு பரப்பும் வகையிலான போலி கணக்குகள், வன்முறையை தூண்டும் பதிவுகள் மற்றும் வீடியோக்கள் கண்காணிக்கப்பட்டு தடை செய்யப்பட்டு வருகிறது என தமிழ்நாடு சைபர் கிரைம் […]
மோசடி

You May Like