தமிழ்நாடு அரசின் மிக முக்கிய திட்டங்களில் ஒன்று தான் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம். இத்திட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவு பெறவுள்ளது. இந்நிலையில், இத்திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது, பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு அரசு மாதந்தோறும் 15ஆம் தேதி தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான குடும்பங்களின் பொருளாதாரத்தை சீரமைக்க இந்தப் பணம் உதவியுள்ளது. இத்திட்டத்தின் மூலம், பல பெண்கள் சிறு தொழில் தொடங்கவும், குடும்பத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் முடிந்துள்ளது.
இந்நிலையில், இந்தத் திட்டத்தின் ஒரு வருட நிறைவு விழாவில், திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள பயனாளிகளுக்கு பல புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகை உயர்த்தப்படுவது தொடர்பான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், திட்டத்தில் புதிதாக இணைக்கப்பட உள்ள பயனாளிகள் குறித்தும் அறிவிப்பு வெளியாகலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Read More : உங்ககிட்ட கூகுள் பே, போன் பே இருக்கா..? அப்படினா நீங்களும் இப்படி மாட்டிக்காதீங்க..!!