fbpx

இந்தியாவில் அறிமுகமாகும் ‘OnePlus 11 5G’!… விலை எவ்வளவு தெரியுமா?… புதுபுது சிறப்பம்சங்கள்!

ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் ஒரு புதிய மார்பில் ஒடிசி (Marble Odyssey Colour) நிறத்துடன் OnePlus 11 5G  ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவுள்ளது.

ஸ்மார்ட்போன் பிரியர்கள் அனைவராலும் அதிகம் விரும்பப்படும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன், கேமரா மட்டுமல்லாமல் அனைத்து வித பயன்பாட்டிற்கும் அருமையாக இருக்கும். தற்பொழுது, ஒன்பிளஸ் நிறுவனம் அதன் சாதன வெளியீட்டு நிகழ்வில் பல அட்டகாசமான சாதனங்களுடன் ஒன்பிளஸ் 11 5G (OnePlus 11 5G) ஸ்மார்ட்போனை வெளியிட்டது.இந்த நிகழ்வில் ஒன்பிளஸ் 11 5G ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ஒரு புதிய மார்பில் ஒடிசி (Marble Odyssey Colour) நிறத்துடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது என நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த போன் தற்போது டைட்டன் பிளாக் (Titan Black), எடேர்னல் க்ரீன் (Eternal Green) என இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை காணலாம்.

ஒன்பிளஸ் 11 5G ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் அளவுடைய குவாட்-எச்டி+ (Quad-HD+ Display) டிஸ்ப்ளே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே 1440×3216 பிக்சல்களின் முழு எச்டி ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெபிரெசிங் ரேட்டையும் (Refresh rate) கொண்டுள்ளது. இது கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) பாதுகாப்புடன் வருகிறது.ஒன்பிளஸ் 11 5G ஸ்மார்ட்போனின் பின்புற முக்கிய கேமரா 50 எம்பி கொண்ட சோனி IMX890 (Sony IMX890) சென்சாருடன் வருகிறது. 48 எம்பி கொண்ட அல்ட்ரா-வைட் கேமராவானது சோனி IMX581 (Sony IMX581) சென்சாருடன் வருகிறது. 32 எம்பி கொண்ட போர்ட்ரெய்ட் டெலி கேமராவானது சோனி IMX709 (Sony IMX709) சென்சாருடன் வருகிறது.

இதன் மூலம் 4K முதல் 8K வரையிலான அல்ட்ரா எச்டி (Ultra HD) வீடியோவை பதிவு செய்து கொள்ள முடியும். இதன் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் கொண்ட சோனி IMX471 (Sony IMX471) சென்சார் உடைய கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 1080p வரையிலான வீடியோவை பதிவு செய்ய முடியும்.ஒன்பிளஸ் 11 5G ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Qualcomm Snapdragon 8 Gen 2 SoC) மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 16 ஜிபி ரேம்+256 ஜிபி நினைவகத்துடன் வர உள்ளது. இரண்டு நானோ சிம் ஆதரவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 இல் ஆக்சிஜன்ஓஎஸ் 13 (OxygenOS 13) உடன் இயங்குகிறது.

ஒன்பிளஸ் 11 5G ஸ்மார்ட்போன் ஆனது 100W சூப்பர்வூக் (SuperVOOC) பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இது ஸ்மார்ட்போனை 25 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யும் என்று கூறுகிறது. இது 5G, 4G, உடன் Type-C போர்ட் இணைப்பு ஆதரவையும் வழங்குகிறது.OnePlus 11 5G ஆனது டைட்டன் பிளாக் (Titan Black), எடேர்னல் க்ரீன் (Eternal Green) என இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. நிறுவனம் விரைவில் புதிய மார்பில் ஒடிசி (Marble Odyssey Colour) நிறத்துடன் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய நிறத்துடன் வரும் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால், இந்தியாவில் OnePlus 11 5G-ன் விலை ரூ. 64,999 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Kokila

Next Post

பார்பி பொம்மையாக மாறிய இளம்பெண்!... மார்பகத்தில் 2 முறை அறுவை சிகிச்சை!... எத்தனை லட்சம் செலவு தெரியுமா?

Fri May 26 , 2023
ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாண்ட் பகுதியை சேர்ந்த ஜாஸ்மின் ஃபாரஸ்ட் என்ற பெண் பார்பியாக மாற ஆசைப்பட்டு ரூ.82 லட்சம் செலவு செய்துள்ளார். பொதுவாகவே பெண்களுக்கு பார்பி பொம்மைகள் விருப்பமான ஒன்றுதான். தங்களது வீடுகளில் விதவிதமான நிறத்தில், விதவிதமான ஆடை அணிந்த பார்பி பொம்மைகளை வாங்கி வைப்பதுடன் அவைகளுடன் விளையாடுவதை ஒரு வழக்கமாகக் கொண்டவர்களும் உண்டு. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாண்ட் பகுதியை சேர்ந்தவர் ஜாஸ்மின் ஃபாரஸ்ட். இவருக்கு வயது 25. இவர் […]

You May Like