சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வருவது வழக்கம். தினமும் வெங்காயம் 60 சரக்கு வாகனங்களில் வரும், ஆனால் தற்போது வரத்து குறைவு காரணமாக 36 சரக்கு வாகனங்களில் குறைவான வெங்காயம் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணாமாக பெரிய வெங்காயம், சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. இதன்காரணமாக, ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.70, சின்ன வெங்காயம் ரூ.120, சென்னை புறநகர் கடைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.90, சின்ன வெங்காயம் ரூ.150க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் மற்ற காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் தக்காளி போன்ற காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது. அதன்படி
- தக்காளி – 1கிலோ ரூ.25
- உருளைக்கிழங்கு – 1கிலோ ரூ.30
- பீன்ஸ் – 1கிலோ ரூ.80
- கேரட் – 1கிலோ ரூ.25
- பீட்ரூட் – 1கிலோ ரூ.35
- கத்திரிக்காய் – 1கிலோ ரூ.25
- வெண்டைக்காய் – 1கிலோ ரூ.30
- சேனைக்கிழங்கு – 1கிலோ ரூ.50
- பச்சைமிளகாய் – 1கிலோ ரூ.60
- கொத்தவரங்காய் – 1கிலோ ரூ.25
- காலிபிளவர் – 1கிலோ ரூ.25
- முள்ளங்கி – 1கிலோ ரூ.50
மேலும் நாசிக்கில் இருந்து வரும் முதல் தரம் வெங்காயம் ரூ.70, பெங்களூரூவில் இருந்து வரும் 2ம் தர வெங்காயம் ரூ.60, ஆந்திராவில் இருந்து வரும் 3ம் தரம் வெங்காயம் விலை ரூ.50க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.