fbpx

’கனியாமூர் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்’..! அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!

கனியாமூர் தனியார் பள்ளி மாணவர்களுக்கு புதன்கிழமை முதல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூரில் வன்முறையால் சேதமடைந்த தனியார் பள்ளியை திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ஷர்வன் குமார் ஜடாவத், எஸ்.பி. பகலவன் ஆகியோருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “மாணவி உயிரிழப்பை தொடர்ந்து கலவரத்தில் சூறையாடப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளி மாணவர்களுக்கு புதன்கிழமை முதல் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என அறிவித்தார்.

’கனியாமூர் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்’..! அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!

கலவரம் காரணமாக பள்ளி சேதமடைந்து மாணவர்கள் கல்வியை தொடர முடியாத சூழலில், ஆன்லைன் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும், பெற்றோர் – ஆசிரியர் கழகத்தின் சார்பில் கருத்துக்கள் கேட்கப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகளை தயார் செய்து அடுத்த வாரம் முதல் வகுப்பு தொடங்கப்படும் என்றும் கனியாமூர் பள்ளி மாணவர்களை அருகாமையில் உள்ள பள்ளிகளில் படிக்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Chella

Next Post

அதிமுக மோதலில் பாஜக நிலைப்பாடு என்ன?.. எடப்பாடியா? ஓ.பன்னீர்செல்வமா..?!

Mon Jul 25 , 2022
சென்னை, அதிமுக கட்சியில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இரு பிரிவினரிடையே, மோதல் அதிகரித்து வரும் நிலையில், தங்கள் ஆதரவு யாருக்கு என்று பாரதிய ஜனதா கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை கைப்பற்றிவிட்டார் என்றாலும், ஓ.பன்னீர்செல்வம் மூலம் தொடந்து குடைச்சல் வந்தால் என்ன செய்வது என்ற கலக்கமும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு இருக்கிறது.மேலும் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டல் சிக்கலாகும் என்பதையும் எடப்பாடி பழனிச்சாமி […]

You May Like