fbpx

ஆன்லைன் சூதாட்டம்!… சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு அதிரடி!

ஆன்லைன் சூதாட்டம், பந்தயம் தொடர்பாக சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் விளையாட்டுக்கு இளைஞர்கள் அடிமையாவதை தடுக்கும் வகையில் அவ்விளையாட்டுகளை வடிவமைக்கும் இணையதளங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதா? என நாடாளுமன்ற மக்களவையில் திமுக உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் கேள்வி எழுப்பியிருந்தார்.இதற்கு மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், திறமையின் அடிப்படையிலான விளையாட்டு மற்றும் வாய்ப்பை அடிப்படையாக கொண்ட விளையாட்டு இடையேயான வேறுபாடு குறித்து நீதிமன்ற உத்தரவுகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். வாய்ப்பை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டுகள் இந்திய சட்டங்களின் கீழ் ‘சூதாட்டம்’ என்று கருதப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் சூதாட்டம் மற்றும் பந்தயம் கட்டுதல் ஆகியவை மாநில அதிகாரத்தின் கீழ் வருபவை, எனவே இதை தடுப்பது மாநில அதிகார வரம்பின் கீழ் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி ஆன்லைன் சூதாட்டம், பந்தயம் தொடர்பாக சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் குறிப்பிட்டுள்ளார்.

Kokila

Next Post

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்.. பின்லாந்து முதலிடம்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..?

Thu Mar 23 , 2023
உக்ரைன், ரஷ்யா, பாகிஸ்தான், ஈராக் மற்றும் இலங்கை போன்ற போர் அல்லது நெருக்கடியை எதிர்கொள்ளும் நாடுகளில் உள்ள மக்களை விட இந்தியர்கள் மகிழ்ச்சியற்றவர்களாக உள்ளனர் என்பதை உலக மகிழ்ச்சி அறிக்கை 2023 வெளிப்படுத்தியுள்ளது. ஆம்.. உலக மகிழ்ச்சி பட்டியலில் இந்தியா 126-வது இடத்தில் உள்ளது. 2022 என்பது உலகிற்கு நெருக்கடியான ஆண்டாகும்.. கொரோனா தொடங்கி, உக்ரைன் போர், பணவீக்கம், பூகம்பங்கள் மற்றும் பல காலநிலை பேரழிவுகள் வரை பல நெருக்கடிகள் […]

You May Like