வங்கிகளுக்கும் மூன்றாம் தரப்பு பயன்பாடு செயலிகளுக்கும் (third-party app providers) இந்திய தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI) பாதுகாப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய தேசிய பணப்பரிவர்த்தனை கழகத்தின்படி, பரிவர்த்தனை செயலிகளில் வருகிற மார்ச் 31 ஆம் தேதிக்குள் இந்த வீடியோவை ஒளிபரப்புமாறு அறிவுறுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமையன்று வங்கிகள், வணிக சேவை வழங்குநர்கள் (PSPகள்) மற்றும் மூன்றாம் தரப்பு ஆப்ஸ் வழங்குநர்கள் (TRAPs) ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில், NPCI, விழிப்புணர்வு வீடியோவை தங்கள் செயலிகளில் ஒளிபரப்புமாறு கேட்டுக்கொண்டது. ஒவ்வொரு முறையும் பணப்பரிவர்த்தனை செயலியை திறக்கும் பொழுதும்,UPIஐ எவ்வாறு பாதுகாப்பாகப் பயன்படுத்துவது என்ற வீடியோ வரவேண்டும் என்றும் அப்படி வீடியோ ஒளிபரப்ப செய்ய முடியாத பட்சத்தில் அதற்கான வீடியோ இணைப்பு லிங்க்-ஐ பதிவு செய்யவேண்டும் என்று NPCI கூறியது.