ஹஜ் யாத்திரை 2023-க்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளன, விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 10 என்று சிறுபான்மை விவகார அமைச்சகம் அறிவிப்பில் தெரிவித்துள்ளது. ஆர்வமுள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். யாத்திரை செல்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

புதிய கொள்கை படி யாத்ரீகர்களுக்கு நிதி நிவாரணம் அளிக்கும் என்றும், ஹஜ் தொகுப்பு செலவுகள் தோராயமாக 50,000 ரூபாய் என அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய அரசுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த ஒதுக்கீட்டில், 80 சதவீதம் இந்திய ஹஜ் கமிட்டிக்கும், மீதமுள்ள 20 சதவீதம் தனியார் நிறுவனங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஹஜ் கமிட்டி மூலம் இதற்கு முன்னர் பயணம் மேற்கொண்டவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள். பெண் யாத்ரீகர்கள் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட யாத்ரீகர்களுடன் வரும் நபர்கள் பணம் செலுத்தி மீண்டும் யாத்திரை செல்லலாம்.