தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகள் அனைத்தும், அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான போக்குவரத்துக் கழகத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் அரசுப் பேருந்துகளுக்கான டிரைவர் மற்றும் நடத்துனர், டெக்னிக்கல் பணியாளர்கள் என பலரும் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் தான், போக்குவரத்துத்துறையில் காலியாகவுள்ள 3,274 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, MTC, SETC, TNSTC பிரிவுகளில் காலியாகவுள்ள ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்களுக்கு மார்ச் 21ஆம் தேதி முதல் ஏப்ரல் 21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை மறுநாளுடன் முடிகிறது. விருப்பமுள்ளவர்கள் www.arasu bus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி :
* கல்வித் தகுதியை பொறுத்தவரை 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
* தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
* கனரக வாகன டிரைவிங் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும்.
* 1.1.2025 தேதிபடி 18 மாதங்கள் கட்டாயம் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு :
01.07.205 தேதிப்படி 24 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை :
* எழுத்துத் தேர்வு
* திறன் தேர்வு
* நேர்காணல்
தேர்வுக் கட்டணம் :
ரூ. 1180 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூ.590 செலுத்தினால் போதும்.
மண்டலம் மற்றும் காலியிடங்கள் :
விழுப்புரம் மண்டலம் – 322
கும்பகோணம் மண்டலம் – 756
சேலம் மண்டலம் – 486
கோவை மண்டலம் – 344
மதுரை மண்டலம் – 322
நெல்லை மண்டலம் – 362