fbpx

தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்கள் தான் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை – மத்திய அரசு தகவல்…

சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்பா தான் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயக்கின்றன. அந்த வகையில் கடந்த சில நாட்களாக கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. அதன்படி இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறையும் என எதிர்பார்த்த நிலையில், ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்..!! பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக குறைகிறது..?

இது குறித்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது “சர்வதேச அளவில் கச்சா எண்னெய் விலை உயர்வால் எண்னெய் நிறுவனங்களுக்கு ரூ 27.276 கோடி இழப்பு ஏற்பட்டபோதும், 2022 ஏப்ரல் 6-க்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவில்லை இதனால் 3 பெட்ரோலிய நிறுவனங்களும் இழப்பை சந்தித்துள்ளன. சமையல் எரிவாயு விலை உயர்ந்த போதும் நுகர்வோருக்கு பாதிப்பின்றி அதை கட்டுப்பாட்டில் வைத்திருக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

நவம்பர் 2021 மே 2022 என 2 முறை பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்திருக்கிறது. இந்தியாவில் பெட்ரோல் – டீசல் விலை குறைவாகவே இருக்கிறது. தமிழகம்,மேற்கு வங்காளம், ஆந்திரபிரதேசம், தெலுங்கானா, கேரளா, ஜார்கண்ட் ஆகிய 6 மாநிலங்கள் வரியை குறைக்காததால், அங்கெல்லாம் விலை அதிகமாகவே இருக்கிறது” என தெரிவித்தார்.

Kathir

Next Post

பெற்றோர்களே கவனம்...! இருமல் மருந்து குடித்ததால் உயிரிழப்பு...? மத்திய அரசு விளக்கம்...

Fri Dec 16 , 2022
காம்பியாவில் 66 குழந்தைகளின் உயிரிழப்புக்குக் காரணமென சந்தேகிக்கப்படும் மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் தயாரித்து ஏற்றுமதி செய்த நான்கு இருமல் மருந்து தரமானதாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆய்வக சோதனைகளில் கலப்படம் எதுவும் இல்லை என ரசாயனங்கள் மற்றும் உரங்களுக்கான இணை அமைச்சர் பக்வந்த் குபா, மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார். சண்டிகரில் உள்ள பிராந்திய மருந்து பரிசோதனை ஆய்வகத்தால் நான்கு இருமல் சிரப்களின் கட்டுப்பாட்டு மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதாகக் கூறினார். ப்ரோமெதாசின் […]

You May Like