fbpx

’அழகு மட்டும் தான்.. அறிவு இல்ல’..!! நாமினேஷனில் சிக்கிய இணை பிரியா ஜோடி..!!

பிக்பாஸ் சீசன் 7-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 9 ஆண் போட்டியாளர்கள், 9 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 பேர் கலந்துகொண்டனர். தற்போது வரை அனன்யா மற்றும் பவா செல்லதுரை ஆகியோர் வெளியேறி உள்ளனர். தற்போது 16 போட்டியாளர்கள் எஞ்சி உள்ளனர். அவர்களுக்கு இடையே போட்டிகளும் கடுமையாகி உள்ளது.

இதற்கிடையே, இந்த வாரத்திற்கான நாமினேஷனில் சிக்கியவர்கள் பற்றிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில் பிக்பாஸ் வீட்டில் உள்ள பெரும்பாலானோர் முதலில் குறிப்பிட்டது மாயாவின் பெயரை தான். இதற்கு அடுத்தபடியாக அவருடன் நெருங்கி பழகி வரும் பூர்ணிமாவை டார்கெட் செய்துள்ளனர். குறிப்பாக ரவீனா, அவரிடம் அழகு இருக்குற அளவுக்கு அறிவு இல்லை என கூறி பூர்ணிமாவை நாமினேட் செய்துள்ளார்.

அடுத்ததாக பிரதீப்பின் பெயரும் இந்த நாமினேஷன் லிஸ்ட்டில் சிக்கி உள்ளது. அதேபோல் ஐஷூ, மணி சந்திரா, விசித்ரா ஆகியோரை நாமினேட் செய்துள்ளனர். இந்த வாரமும் மாயா மற்றும் பூர்ணிமா ஆகியோர் நாமினேஷனில் சிக்கி உள்ளதால் அவர்கள் இருவரில் ஒருவர் கண்டிப்பாக எலிமினேட் ஆகிவிடுவார்கள் என நெட்டிசன்கள் தற்போதே யூகிக்க தொடங்கி விட்டனர்.

Chella

Next Post

10,000 குவாட்ரில்லியன் டாலர் மதிப்புள்ள சிறுகோள்..!! பூமியில் விழுந்தால் என்ன ஆகும்..? நாசா சுவாரஸ்ய தகவல்..!!

Mon Oct 16 , 2023
எல்லையற்ற பிரபஞ்சம், பல விசித்திரமான விஷயங்களுக்கு தாயகமாக உள்ளது. மனிதனின் அறிவுத்திறன் எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும், பிரபஞ்சத்தின் பல மர்மங்கள் தீர்க்கப்பட்டாலும், இன்னும் பல மர்மங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இந்த மர்மங்களில் ஒன்று 16 Psyche எனப்படும் கிரக துண்டு. செவ்வாய் மற்றும் வியாழன் கோளுக்கு இடையே 16 சைக் என்ற மிகப்பெரிய உலோக சிறுகோளை தாக்கும் பணியில் நாசா ஈடுபட்டுள்ளது. இதுவரை இந்த பணி சிறுகோள் பற்றிய சில […]

You May Like