fbpx

செக்…! 80 சதவீத வருகை பதிவு உள்ளவர்களுக்கு மட்டுமே தேர்வு எழுத அனுமதி…! பள்ளிக்கல்வித்துறை அதிரடி

இது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; 2023-24-ம் கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ள நேரடி தனி தேர்வர்களும், ஏற்கெனவே 2012-க்கு முன்பு பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி அறிவியல் பாடத்தில் தோல்வி அடைந்தவர்களும், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர பெயரை பதிவு செய்யலாம். தனி தேர்வர்கள் ஆகஸ்ட் 10 முதல் 21-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் தங்கள் பெயரை பதிவுசெய்து கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்கும் மாணவர்கள், மாவட்ட கல்வி அலுவலரால் ஒதுக்கப்படும் பள்ளிக்கு சென்று, செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும். 80 சதவீத வருகை பதிவு உள்ள தனி தேர்வர்கள் மட்டுமே 2023-24-ம் கல்வி ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான விண்ணப்பத்தை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 10 முதல் 21-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட கல்வி அலுவலரிடம் 21-ம் தேதிக்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும்.

Vignesh

Next Post

இந்தியாவின் பேய் ரயில் நிலையம் எது தெரியுமா?... உலகின் திகில் நிறைந்த பேய் ரயில் நிலையங்கள்!

Wed Aug 2 , 2023
ரயில் நிலையம் என்பது நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான மனிதர்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு ஏற்றிச்செல்லக்கூடிய ஒரு போக்குவரத்து முறை. நம் நாட்டில்கூட பெரும்பாலானோர் ரயில் பயணத்தை மேற்கொள்கின்றனர். இந்த உலகில் சில நாடுகளில் ரயில் சேவைகள்கூட இல்லை. ஏனென்றால் இடப்பற்றாக்குறை மற்றும் அதற்கான வசதியில்லை. சில நாடுகளில் மயான விடுதிகளுக்கு மத்தியிலும் ரயில் பாதைகளை அமைத்துள்ளார்கள். அவ்வாறான பயங்கரமான 7 ரயில் பாதைகள் பற்றி இன்று பேசவுள்ளோம். […]

You May Like