fbpx

ஒரே இன்னிங்ஸ்தான்!… சிக்ஸர், ஸ்கோர், சதம் அடித்து சாதனைக்கு மேல் சாதனை படைத்த சுப்மன் கில்!

ஐபிஎல் தொடரின் 2-வது தகுதிச்சுற்று GT vs MI போட்டியில், சுப்மன் கில் அதிரடியாக விளையாடி சதமடித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிஃபயர் போட்டி அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. அதில், குவாலிஃபயர் 1-ல் தோல்வியுற்ற குஜராத் டைட்டன்ஸ் அணியும், எலிமினேட்டரில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 233 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய சுப்மன் கில் 60 பந்துகளில் 129 ரன்கள் விளாசினார்.

அதாவது சுப்மன் கில்லை ஆட்டம் இழக்க வைக்க மும்பை எடுத்த எந்த முயற்சியும் துளி கூட பலன் அளிக்கவில்லை.32 பந்தில் அரை சதத்தை பூர்த்தி செய்த சுப்மன் கில், அடுத்த 17 பந்துகளில் 100 ரன்களைக் கடந்தார். இதில் 10 சிக்ஸர்களும், ஏழு பவுண்டரிகளும் அடங்கும்.சுப்மன் கில் இந்த இன்னிங்ஸ் மூலம் பல ரெக்கார்டுகள் உடைக்கப்பட்டு இருக்கிறது. அது என்னவென்று தற்போது பார்க்கலாம். ஐபிஎல் பிளே ஆப் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட அதிகபட்ச தனி நபர் ஸ்கோர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்திருக்கிறார்.

இதேபோன்று பிளே ஆப் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையும் சுப்மன் கில் இன்று படைத்திருக்கிறார். ஷேவாக், சாகா, கெயில், வாட்சன் ஆகியோர் தலா 8 சிக்ஸர்கள் அடித்து இருந்த நிலையில் இந்த ரெக்கார்டு அனைத்தையும் சுப்மன் கில் இன்று உடைத்து இருக்கிறார். இதேபோன்று ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சுப்மன் கில் தற்போது மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார்.

விராட் கோலி 2016 ஆம் ஆண்டு 973 ரன்களும், ஜாஸ் பட்லர் 863 ரன்களும் சுப்மன் கில் நடப்பாண்டில் 851 ரன்களும் அடித்திருக்கிறார்கள். இதேபோன்று பிளே ஆப் சுற்றில் சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையும் சுப்மன் கில்லுக்கு கிடைத்திருக்கிறது. கடைசியாக விளையாடிய நான்கு ஐபிஎல் ஆட்டத்தில் சுப்மன் கில் மூன்று சதம் அடித்திருக்கிறார். மேலும் ஒரு சீசனில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி ஜாஸ் பட்லருக்கு பிறகு சுப்மன் கில் மூன்றாவது இடம் பிடித்திருக்கிறார்.

Kokila

Next Post

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்!... ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு தொகை!... பட்டியலை வெளியிட்டது ஐசிசி!

Sat May 27 , 2023
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் வெல்லும் அணியிலிருந்து, இதுவரை வெளியேறிய அணிகள் வரை ஒவ்வொரு இடத்துக்கும் ஒவ்வொரு பரிசு தொகையை ஐசிசி அறிவித்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை 4 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வந்தது ஐசிசி. இது டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றும் வகையில் கொண்டுவரப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு 2 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறும் சதவீதத்தின் அடிப்படையில், முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் உலக டெஸ்ட் […]

You May Like