fbpx

#Breaking: சென்னை உள்ளிட்ட 6 மாவட்டத்தில் இன்று விடுமுறை…! முழு விவரம் இதோ…!

திருவள்ளூர் மாவட்டத்தில் 4 தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் பகுதியில் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 4 தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை. அதன்படி, திருவள்ளூர், ஆவடி, பூவிருந்தவல்லி, பொன்னேரி ஆகிய தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, திருவாரூர் மயிலாடுதுறையில் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறையாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

தமிழகத்தில் இன்று கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

ஆவின் பால் கொள்முதல் விலை அதிரடி உயர்வு..!! தமிழக அரசு அறிவிப்பு..!! எவ்வளவு தெரியுமா?

Fri Nov 4 , 2022
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், ”ஆவின் நிறுவனம் கிராம அளவில் 9,354 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட அளவில் 27 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள், மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் என்ற மூன்றடுக்கு கட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக […]

You May Like