fbpx

“இனி இவர்களுக்கு மட்டுமே சபரிமலையில் அனுமதி..” – திருவிதாங்கூர் தேவஸ்தானம் திடீர் முடிவு!

சபரிமலையில் இனி பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் உயர் மட்ட ஆலோசனை கூட்டம் தலைவர் பிரசாந்த் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடந்த ஆண்டு சபரிமலையில் ஏற்பட்ட கூட்டநெரிசல் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் பின்னர் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.  அதுகுறித்து தேவஸ்தான தலைவர் பிரசாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, “சபரிமலையில் கடந்த மண்டல, மகர விளக்கு சீசனில் பக்தர்களின் கூட்ட நெரிசல் காரணமாக நிகழ்ந்த சம்பவங்களை கருத்தில் கொண்டு, இனிவரும் சீசன் காலங்களில் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படும்.

அதாவது ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 80 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சீசன் தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னதாகவே முன்பதிவை உறுதி செய்து கொள்ள முடியும். பம்பை முதல் சன்னிதானம் வரை ரோப் கார் அமைப்பது குறித்தான ஆய்வு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.

அந்த அறிக்கை வருகிற 23-ந்தேதி ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும். கோர்ட்டின் அனுமதி கிடைத்ததும் ரோப் கார் பணிகள் தொடங்கப்படும். முதற்கட்டமாக அப்பம், அரவணைக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்லவும், அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் சேவைக்காகவும் ரோப் கார் பயன்படுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.

Next Post

ரஷ்ய போலீஸாரால் தேடப்படுவோர் பட்டியலில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி!

Sun May 5 , 2024
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட பலரை ரஷ்ய போலீசார் தேடப்படுவோர் பட்டியலில் வைத்துள்ளனர். மேலும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக குற்ற வழக்கு ஒன்றையும் ரஷ்யா பதிவு செய்துள்ளது. உக்ரைனுக்கு எதிராக 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்து, உக்ரைன் மக்கள் பலர் மற்றும் பிற ஐரோப்பிய அரசியல்வாதிகளுக்கு எதிராக ரஷியா கைது வாரண்டுகளை பிறப்பித்து உள்ளது. இதன்படி, எஸ்தோனியா நாட்டு பிரதமர் காஜா கல்லாஸ், லித்துவேனியா […]

You May Like