“இந்தி படித்தவன் எங்க வீட்ல மாடு மேய்க்கிறான்” என திமுக அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் முக.ஸ்டாலினின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுக்கூட்டங்கள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் போன்றவர்களை திமுகவினர் செய்து வருகின்றனர். அந்த வகையில் தான், செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைச்சர் தா.மோ.அன்பரசன், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் அன்பரசன், சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், சுயமரியாதை திருமணம் அதிகாரப்பூர்வமாக செல்லும் என அறிவித்தார். தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழி கொள்கையை கொண்டு வந்தவர் பேரறிஞர் அண்ணா. பல்வேறு நாடுகளில் தமிழ், ஆங்கிலம் படித்தவர்கள் தான் பணியாற்றி வருகின்றனர். இந்தி படித்தவர்கள் எங்கே இருக்கான் தெரியுமா..?
இந்தி படித்தவர்கள் எல்லாம் எங்கள் வீட்டில் மாடு மேய்க்கின்றார்கள். நான் பொய் சொல்லவில்லை. உண்மையில் மாடுதான் மேய்த்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் இந்தி படித்தவர்கள் பானி பூரியும், கொளுத்து வேலையும் செய்து வருகின்றனர். நாமும் இந்தி படித்தால், வடநாட்டிற்குச் சென்று பானி பூரி தான் வைக்க வேண்டும்” என்றார்.
Read More : தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகள் அகற்றம்..? உள்ளூர்வாசிகளுக்கு பாஸ்..!! அமைச்சர் எ.வ.வேலு அதிரடி அறிவிப்பு..!!