இந்திய குடிமக்களுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. வாங்கி கணக்கு முதல் மின் அட்டை வரை ஆதார் பயன்படுகிறது. ஆதார் என்பது இந்திய மக்களின் ஒரு அடிப்படை தேவையான ஒன்றாக மாறிவிட்டது. இது அடையாளச் சான்றாகவும் முகவரிச் சான்றாகவும் இருக்கிறது. அரசின் நலத்திட்ட உதவிகள், சேவைகள் மற்றும் மானியங்களைப் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதாரின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய, அவ்வபோது ஆதார் விவரங்களை புதுப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.
ஆதார் செயலில் உள்ளதா? என்பதையும் அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா? என்பதையும் சரிபார்க்க வேண்டும் என்று UIDAI அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டையை பெற்றவர்கள், அதை புதுப்பிக்கவில்லை என்றால், தற்போது புதுப்பித்துக் கொள்ளலாம். இந்த வசதியைப் பெற, அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அடையாளச் சான்று மற்றும் முகவரியைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் விவரங்களையும் புதுப்பிக்க ரூ.50 செலவாகும். மேலும், ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிப்பிக்க ஜூன் 14ஆம் தேதி வரை என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த காலக்கெடு தற்போது செப்டம்பர் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் ஆதார் விவரங்களை புதுப்பிப்பது எப்படி: https://myaadhaar.uidai.gov.in என்ற இணையதளத்தில், Aadhaar Self-Service portal என்ற பக்கத்தை பார்வையிடவும். ஆதார் எண் அல்லது விர்ச்சுவல் ஐடி மற்றும் கேப்ட்சாவை பயன்படுத்தி போர்ட்டலில் உள்நுழைய வேண்டும். செயல்முறையை அங்கீகரிக்க பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு ஓடிபி வரும். Document update பகுதிக்குச் சென்று, ஏற்கனவே உள்ள விவரங்களை சரிபார்க்க வேண்டும். அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலில் இருந்து பொருத்தமான ஆவண வகையைத் தேர்ந்தெடுத்து அசல் ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்னர், Submit என்பதை கிளிக் செய்து, விண்ணப்பக் கோரிக்கையின் நிலையைக் கண்காணிக்க சேவை கோரிக்கை எண்ணை (SRN) குறிப்பிட வேண்டும்.
ஆப்-ல் புதிப்பித்து எப்படி: கூகுள் பிளே ஸ்டோரில் mAadhaar என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர், செயலியை திறந்து, திரையின் மேல் வலது மூலையில் உள்ள QR குறியீடு ஐகானை கிளிக் செய்யவும். நீங்கள் சரிபார்க்க விரும்பும் ஆதார் அட்டை, இ-ஆதார் அல்லது ஆதார் பிவிசியில் அச்சிடப்பட்ட QR குறியீட்டின் மீது மொபைல் கேமராவைச் சுட்டிக்காட்டவும். QR குறியீட்டை ஸ்கேன் செய்த பின்னர் பெயர், பாலினம், பிறந்த தேதி, முகவரி மற்றும் புகைப்படம் போன்ற விவரங்கள் காண்பிக்கும். இந்த விவரங்கள் UIDAI ஆல் டிஜிட்டல் முறையில் கையொப்பமிடப்பட்டு, நம்பகத்தன்மையை சரிபார்க்கலாம். ஆதார் விவரங்களை புதுப்பிக்க வேண்டுமென்றால், “Update Your Aadhar” என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் முகவரி மாற்றம் உள்ளிட்ட விவரங்களை அப்டேட் செய்து கொள்ளலாம். தேவையான கட்டணத்தை செலுத்திய பின்னர் Save செய்து பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.