fbpx

இன்றுமாலை 6 மணி வரைதான் கெடு!… அதிரடி காட்டும் சத்திய பிரத சாஹு!

Political campaign: நாடாளுமன்ற தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் பிரச்சாரம் மேற்கொள்வதற்கான கெடு இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது.

தமிழ்நாட்டில் வரும் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. நேற்று மாலையுடன் பூத் சிலிப் கொடுக்கும் பணி நிறைவடைந்தது. அதன்படி, வாக்காளர்களுக்கான பூத் சிலிப் 92.80 % கொடுக்கபட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அன்றிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. மேலும் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் இன்று மாலை 6 மணி முதல் பிரச்சாரம் ஓய்ந்த பிறகு அமைதி பிரச்சாரம், துண்டு பிரசார விநியோகம் உள்ளிட்ட எந்தவிதமான வடிவ பிரச்சாரங்களும் அனுமதிக்கப்பட மாட்டாது என தமிழக தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாகு தெரிவித்துள்ளார். முதற்கட்ட தேர்தல் நடைபெறும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலும் நடைபெற இருக்கும் நிலையில் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

6 மணிக்கு மேல் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது. தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர்களை கவரும் வகையில் பரிசு பொருள் வழங்குவது பணப்பட்டுவாடா உள்ளிட்டவத்தை தடுப்பு தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளதாகவும், விதிமீறல் குறித்து பொதுமக்கள் புகார் அளித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்

Readmore: ரோபோக்கள், ஆட்டோமேஷன் மனித வேலைகளை பறிக்காது!… மேம்படுத்தும்!… அமேசான் அதிகாரி பேச்சு!

Kokila

Next Post

Drugs: இலங்கையில் இருந்து போதை பொருள் கடத்தல்... 3 பேர் அதிரடியாக கைது...!

Wed Apr 17 , 2024
இந்திய கடலோர காவல்படை (ஐ.சி.ஜி) மற்றும் சுங்கத் தடுப்பு பிரிவு (சி.பி.யூ), ஆகியவற்றுடன் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில், மண்டபம், வேதாளை கடற்கரை அருகே நடுக்கடலில் 4.9 கிலோ வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட தங்கத்தை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் பறிமுதல் செய்துள்ளது. இலங்கையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை கடற்கரை வழியாக மீன்பிடி படகு மூலம் ஒரு கும்பல் இந்தியாவுக்கு வெளிநாட்டு தங்கத்தைக் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி […]

You May Like