fbpx

”எனக்கு நீ மட்டும் போதும்”..!! கள்ளக்காதலனுடன் ஓட்டம்..!! புதுச்சேரியில் ரூம்..!! வசமாக சிக்கிய ஜோடி..!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே செம்மாண்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சவுண்டப்பன். இவர், நெசவு தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 9 வயதில் ஆண் குழந்தையும், 7 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், பொட்டியபுரம் பகுதியை சேர்ந்தவர் தனபால். இவருக்கும் திருமணமாகி ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்தநிலையில், தனபால் செம்மாண்டப்பட்டியில் சவுண்டப்பன் வீட்டருகே பட்டு நெசவு செய்யும் கூலி வேலை செய்து வருகிறார். இதற்கிடையே, தனபாலுக்கும், சவுண்டப்பன் மனைவி லட்சுமிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஏற்காடு, கொல்லிமலை, மேட்டூர் என பல பகுதிகளுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் இருவரும் குடும்பத்தை பிரிந்து தனியாக வசிக்க திட்டமிட்டனர். இதையடுத்து, இரண்டு குழந்தைகளையும் தவிக்கவிட்டு விட்டு லட்சுமி, கள்ளக்காதலன் தனபாலுடன் ஓட்டம் பிடித்தார். இதற்கிடையே, மனைவியை காணவில்லை என ஓமலூர் காவல் நிலையத்தில் சவுண்டப்பன் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஒரு வார தேடுதலுக்கு பிறகு பாண்டிச்சேரியில் அறை எடுத்து தங்கியிருந்த ஜோடியை கண்டுபிடித்து ஓமலூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது லட்சுமியை பார்த்து குழந்தைகளும், கணவரும் தங்களுடன் வருமாறு அழுதுள்ளனர். ஆனால், தனக்கு குழந்தைகளும் வேண்டாம், கணவரும் வேண்டாம் என்று கூறிய லட்சுமி, தனது கள்ளக்காதலன் தனபாலுடன் தான் செல்வேன் என்று கூறியுள்ளார். 

அப்போது அவருடன் அனுப்ப மறுத்த காவல்துறையினர், லட்சுமியை தாயுடன் அனுப்பி வைத்தனர். இதற்கிடையே தனபாலின் மனைவி, தனது கணவனிடம் தகராறு செய்து தங்களுடன் வருமாறு கூச்சலிட்டார். இதையடுத்து காவல்துறையினர் தனபாலை மனைவி மற்றும் குழந்தைகளுடன் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் ஓமலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

பெண்களே நற்செய்தி... மீண்டும் சரசரவென குறைந்த தங்கம் விலை...

Thu Feb 23 , 2023
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.41,960-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் விலை […]
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!!

You May Like