fbpx

அச்சச்சோ..!! இவர்களுக்கெல்லாம் ரூ.1,000 கிடைக்காதாம்..!! அதிர்ச்சியில் பொதுமக்கள்..!! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், சமீபத்தில் வெளியான அறிவிப்பில், 2.19 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்றும், அதில் ஒரு கிலோ பச்சரிசி, ஒருகிலோ சர்க்கரை, முழு கரும்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்ப்ல் ரூ.1,000 இடம்பெறாதது பெரும் ஏமாற்றத்தை அளித்திருந்தது.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 பரிசுத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 பரிசாக ரேஷன் கடைகளில் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

ஆனால், இந்த தொகை அனைவருக்கும் கிடைக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த தொகையை பெற முடியும். மத்திய-மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் ஆகியோருக்கு பொங்கல் பரிசுத் தொகை ரூ.1,000 வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்!… சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

Sat Jan 6 , 2024
இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய் (ஐஎல்ஐ) அல்லது கடுமையான சுவாச நோய் (SARI) கண்டறியப்பட்ட நபர்களுக்கு கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்குமாறு கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் அறிவுறுத்தியுள்ளார். இந்தியாவில் ஜெ.என்.1 மாறுபாடு கொரோனா நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்து வருகிறது. அனைத்து மாநிலங்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. அந்தவகையில் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், […]

You May Like